தேர்தல் ஓவர்.. 17 நாட்களுக்கு பிறகு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு - அப்படிப்போடு!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்த நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய திமுக, வரும் மே.7ம் தேதி, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைக்கிறது.
159 இடங்களில் திமுக கூட்டணியும், 75 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றிப் பெற்றுள்ளன. தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்க, வலிமையான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவை செல்கிறது அதிமுக.

விலை உயர்வு
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை 17 நாட்களுக்கு பிறகு இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா ஊரடங்கு ஒருபக்கம், சட்டமன்ற தேர்தல் ஒருபக்கம் என்ற சூழலில், மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

நான்கு முறை
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பிருந்து, விலை ஏற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மாறாக தேர்தல் நடைபெற்ற காலமான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 4 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

இன்றைய விலை
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்தல் தற்போது முடிந்துவிட்ட நிலையில், இன்று பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.55 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

அடுத்தடுத்து விலை ஏற்றம்?
தேர்தல் முடியும் வரை கப்சிப் மோடில் இருந்த பெட்ரோல், டீசல் விலை நிலவரம், இப்போது மீண்டும் 17 நாட்கள் கழித்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனை நாட்கள் விலை ஏற்றப்படாததன் சுமையை, அடுத்தடுத்து விலை ஏற்றி சரி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications