கச்சா எண்ணெய் மதிப்பு சரிவு: தேசிய அளவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 20 பைசா குறைந்தது
சென்னை: தேசிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 20 பைசா இன்று குறைக்கப்பட்டது. பல நாட்களுக்கு பின் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதில் இருந்தே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மத்திய அரசும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் பெரிய அளவில் எடுக்காத காரணத்தால் தொடர்ந்து விலை உச்சத்திலேயே இருந்தது. இதனால் தினமும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றபடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

ஆசியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகம் விற்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் தேசிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 20 பைசா இன்று குறைக்கப்பட்டது.
டீசல் விலை கடந்த ஆகஸ்ட் 18ம் தேதிக்கு பின்பில் இருந்தே தொடர்ந்து 3 நாட்களாக சரிந்த நிலையில் இன்றும் சரிவை சந்தித்தது. தினமும் 20 பைசா என்ற விதத்தில் டீசல் விலை சரிந்து வருகிறது டீசல் விலை ஒவ்வொருமுறை சரிந்த போதும் பெட்ரோல் விலை மட்டும் குறையாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 36 நாட்களுக்கு பின் முதல் முறையாக பெட்ரோல் விலை தேசிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.
கடைசியாக பெட்ரோல் டீசல் விலை ஜூலை 17ம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்பின் உயர்த்தப்படாமல் இருந்த விலை இப்போது சரிவை சந்தித்துள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை மாநில அரசின் வரி குறைப்பால் 3 ரூபாய் குறைந்தது. இதனால் மற்ற மாநில மக்களும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல், டீசல் விலை தேசிய அளவில் 20 பைசா சரிந்துள்ளது. தற்போது டெல்லியில் பெட்ரோல் 101.64 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் 89.07 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ 99.32 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 93.66 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற நகரங்களின் விவரம்
பெங்களூரில் பெட்ரோல் விலை 105.05 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 94.48 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மும்பையில் பெட்ரோல் விலை 107.63 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 96.65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 102.42 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 96.01 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications