சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகபட்சம் 5 நாள்தான்.. பெட்ரோல் விலை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயரும்.. எச்சரிக்கை!

அமெரிக்கா ஈரான் இடையே நிலவும் பிரச்சனை காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை இன்னும் சில நாட்களில் மிக கடுமையாக உயர போகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்கா ஈரான் இடையே நிலவும் பிரச்சனை காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை இன்னும் சில நாட்களில் மிக கடுமையாக உயர போகிறது.

நேற்று ஈரான் அருகே பெர்ஷியன் கடலில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில் சவுதி கப்பல்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இரண்டு சவுதியின் எண்ணெய் கப்பல்கள், ஒரு அமீரகத்தின் எண்ணெய் கப்பல், ஒரு தனியார் நிறுவன எண்ணெய் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

Petrol, Diesel price will get into a new high due to the USA and Iran crisis

இதை ஈரான்தான் செய்து இருக்கிறது என்று, அமெரிக்கா நேரடியாக குற்றச்சாட்டு வைத்து இருந்தது. ஈரான் மீது அமெரிக்கா மூன்று பொருளாதார தடைகளை விதித்து இருக்கிறது. இதனால் ஈரான் தற்போது எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது ராணுவத்தை குவித்து வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை.

இந்த பிரச்சனை காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை இன்னும் சில நாட்களில் மிக கடுமையாக உயர போகிறது. இப்போது ஈரானிடம் வாங்கிய பெட்ரோல் டீசல் கையிருப்பு ஏற்கனவே இந்தியாவிடம் உள்ளது. இந்த வாரத்தோடு அந்த கையிருப்பு காலியாகும்.

Petrol, Diesel price will get into a new high due to the USA and Iran crisis

அதன்பின் இந்தியா சவுதி, அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளிடம் இருந்து மட்டுமே எண்ணெய் வாங்க முடியும். இதில் அமெரிக்காவிடம் இருந்து வரும் எண்ணெய் எப்போதும் போல வரும். ஆனால் சவுதி, அமீரகம் எண்ணையை வாங்குவதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் பயமுறுத்தி உள்ளது. இதனால் இந்த ஹோர்முஸ் ஜலசந்தியை சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகள் வரும் நாட்களில் பயன்படுத்த முடியாது. இதனால் இந்தியாவிற்கு இந்த நாடுகளிடம் இருந்து எண்ணெய் வருவது சந்தேகமாகி உள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு எதிராக ஏற்கனவே அமெரிக்க தனது படைகளை குவித்து வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அந்த வழியை எண்ணெய் ஏற்றுமதி செய்ய மத்திய கிழக்கு நாடுகள் பயன்படுத்துமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் அந்த ஒரு பகுதி மட்டுமே எண்ணெய் ஏற்றுமதி இருக்கும் வழி. இந்தியா எப்படி மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து எண்ணெய் பெற போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை இன்னும் சில நாட்களில் மிக கடுமையாக உயர போகிறது என்கிறார்கள்.

முக்கியமாக தேர்தலுக்கு பின் பெட்ரோல் டீசல் விலையில் இமாலய உயர்வு ஏற்படலாம் என்று கூறுகிறார்கள். தற்போது கையிருப்பு தீர்ந்த பின் எண்ணெய் விலை உச்சத்தை அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

English summary
Petrol, Diesel price will get into a new high due to the USA and Iran crisis in Middle East.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X