பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. வாகன ஓட்டிகளுக்கு இடியை இறக்கிய மத்திய அரசு!
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் அதிகரித்து ரூ.105.31 ஆக விற்பனை ஆகின்றது.
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதன் எதிரொலியாகவே ஏற்கனவே இருமுறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த புதிய உயர்வின் படி, பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று ரூ.104.57 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ.105.44 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் அதிகரித்து ரூ.105.31 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ச்சியாக எரிபொருள் விலை உயர்வதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் வரி சுமைகளே இந்த உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications