இன்றும் உயர்ந்தது.. ரூ.110ஐ தாண்டிய பெட்ரோல் விலை.. சதமடித்த டீசல்.. சென்னையில் என்ன நிலவரம்?
சென்னை: நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று டீசல் விலை சதமடித்தது.
Recommended Video
இந்தியாவில் கடந்த 15 நாட்களுக்கு முன் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்த 15 நாட்களில் 2 நாட்கள் தவிர மற்ற 13 நாட்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 30 பைசாவில் இருந்து 80 பைசா வரை சராசரியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

இன்றும் உயர்வு
கடந்த 15 நாட்களில் 13வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்தது. பெட்ரோல் ஒரு லிட்டர் 110.09 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்தது. டீசல் ஒரு லிட்டர் 100.18 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

மதுரை நிலை
இதன் மூலம் சென்னையில் முதல்முறை பெட்ரோல் விலை ரூ.110ஐ தாண்டியது: டீசல் விலை சதமடித்துள்ளது. ஏற்கனவே மதுரையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 111ஐ தொட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இன்று பெட்ரோல் விலை 80 பைசாவும், டீசல் விலை 80 பைசாவும் உயர்த்தப்பட்டது. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 104.61க்கு விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 95.87க்கு விற்கப்படுகிறது.

மும்பை
இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் விற்கும் மெட்ரோ நகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை 120 ரூபாயை நெருங்குகிறது. அங்கு பெட்ரோல் விலை 84 பைசாவும், டீசல் விலை 85 பைசாவும் உயர்த்தப்பட்டது. மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 119.67 க்கு விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 103.92 க்கு விற்கப்படுகிறது.

5 மாநில தேர்தல்
5 மாநில தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி இருந்தது. அதன்பின் தேர்தல் முடிவுகள் வந்ததும் நாடு முழுக்க மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 99 டாலர் என்ற அளவில் குறைந்தும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications