சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல் பங்குகுளில் புது ரூல்ஸ்.. முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகம்

Google Oneindia Tamil News

சென்னை: முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகிக்கப்படும் என பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

 petrol-diesel will be distributed only if the mask is worn

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை 6-ந் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகிற வாடிக்கையாளர்கள் முக கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் என்றும், முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்க முடியும் என்பதையும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம், கொரோனா பரவுதல் தீவிரமான இருந்த காலங்களில் தெரிவித்திருந்தது.

தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் வருகிற 10-ந் தேதி முதல் மீண்டும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்கப்படும் என்பதை தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துக் கொள்கின்றது" இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
The Petroleum Merchants Association has announced that petrol-diesel will be distributed only if the mask is worn.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X