சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்வு.. டீசல் விலையில் மாற்றம் இல்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

பெட்ரோல், டீசல் விலையை அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே அன்றாடம் நிர்ணயித்து வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Petrol price hike: What will be the cost of petrol in Chennai?

இதையடுத்து ஏப்ரல், மே மாதம் வரை பெட்ரோல் , டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை. ஆனால் ஜூன் மாதம் முதல் அதன் விலை உயர்ந்து வருகிறது.

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு இந்த பெட்ரோல், டீசல் விலை கழுத்தை நெருக்கியது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூ 84.64 க்கு விற்பனையானது. அது போல் டீசல் விலை லிட்டர் ரூ 78.86-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தினம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்ந்தது. அதன்படி இன்று பெட்ரோலின் விலை ரூ 84.73 ஆகும். டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. அதனால் டீசல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+