நாளை முதல் யுபிஐ மூலம் பணம் வாங்க மாட்டோம்.. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திட்டவட்டம்! என்ன காரணம்!
சென்னை: இப்போதெல்லாம் எங்குச் சென்றாலும் நாம் யுபிஐ மூலமாகவே பேமெண்டுகளை செய்து வருகிறோம். ஆனால், இதை வாய்ப்பாகப் பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள் மோசடிகளையும் செய்கிறார்கள். இதற்கிடையே நாளை முதல் பெட்ரோல் நிலையங்களில் யுபிஐ மூலம் பேமெண்டுகளை வாங்கப்போவது இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் யுபிஐ வந்த பிறகு நாம் செலவழிக்கும் முறையே மொத்தமாக மாறிப்போனது. முன்பெல்லாம் எங்குச் சென்றாலும் கையில் ரொக்கத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், இப்போது அப்படி இல்லை. எல்லாப் பக்கமும் யுபிஐ இருக்கிறது. பர்ஸ்ஸை மறந்துவிட்டுச் சென்றால் கூட கையில் செல்போன் இருந்தாலே போதும் என்ற நிலையே இருக்கிறது.

யுபிஐ
யுபிஐ மூலம் பணம் செலுத்தும் போது பொதுமக்களுக்கும் சரி, வணிகர்களுக்கும் சரி கூடுதலாக எந்தவொரு கட்டணமும் இல்லை. இதன் காரணமாகவே பலரும் யுபிஐ மூலம் பணம் செலுத்துகிறார்கள். இதற்கிடையே இப்போது ஒரு அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
அதாவது நாளை மே 10ம் தேதி முதல் யுபிஐ மற்றும் கார்டு பேமெண்டுகளை ஏற்கப்போவது இல்லை என்று மகாராஷ்டிராவின் நாக்பூர் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். மகாராஷ்டிரா தானே என நினைக்க வேண்டாம். இதனால் நமக்கு என்ன சிக்கல் என்பதைத் தெரிந்து கொள்ள முழுமையாகப் படியுங்கள். அதாவது அதிகரிக்கும் சைபர் மோசடிகள் மற்றும் வங்கிக் கணக்கு கட்டுப்பாடுகள் காரணமாகப் பல பெட்ரோல் பங்குகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இந்தப் போராட்டத்தைப் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
என்ன காரணம்
இது தொடர்பாக விதர்பா பெட்ரோலியம் டீலர் அசோசியேஷன் தலைவர் அமித் குப்தா கூறுகையில், "சைபர் கிரிமினல்கள் தொடர்ச்சியாக மோசடி செய்கிறார்கள். அதாவது அவர்கள் பெட்ரோல் நிரப்பிவிட்டு யுபிஐ மூலம் பணம் அனுப்புகிறார்கள். பிறகு மோசடி பரிவர்த்தனை எனத் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளித்துவிடுகிறார்கள். இதனால் எங்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகிறது. எங்கள் பணத்தையே எங்கள் வங்கிக்கணக்கில் இருந்து எடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது" என்றார்.
ஏற்க மாட்டார்களாம்
இதுபோல மோசடி செய்பவர்கள் திருடப்பட்ட யுபிஐ ஐடிகள், டெபிட்/ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடிகள் செய்வதாகவும் கூறுகிறார்கள். இதன் காரணமாக முதலில் நாக்பூரில் மட்டும் யுபிஐ, டெபிட்/ கிரெடிட் பேமெண்டுகளை ஏற்கப்போவதில்லை என அறிவித்தார்கள். இதற்கிடையே மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளிலும் இந்தப் பிரச்சினை இருக்கும் நிலையில், மும்பை உட்பட அங்குப் பல மாவட்டங்களில் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நாளை மட்டும் யுபிஐ, டெபிட்/ கிரெடிட் பேமெண்டுகளை ஏற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. அதேநேரம் இதர பகுதிகளில் நாளை மட்டும் ஏற்க மாட்டார்களா.. இல்லை இந்தப் பிரச்சினையில் தீர்வு வரும் வரை ஏற்க மாட்டார்களா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.
நாம் ஏன் கவலைப்பட வேண்டும்!
மகாராஷ்டிராவில் தானே இந்தப் பிரச்சினை என நீங்கள் கேட்கலாம்.. கடந்த காலங்களில் நடந்தவற்றை எடுத்துப் பார்த்தால் ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரியும். அதாவது முதலில் வடமாநிலங்களில் நடக்கும் மோசடிகள்... சில வாரங்கள் அல்லது சில மாதங்களில் மெல்லத் தமிழ்நாடு உட்படத் தென்மாநிலங்களிலும் நடக்கத் தொடங்கும். கார்ட் மோசடி தொடங்கி டிஜிட்டல் கைது வரை இதுபோல முதலில் அங்கும்.. பிறகு தென்மாநிலங்களிலுமே நடந்தன. எனவே, அதை வைத்துப் பார்த்தால் வரும் காலங்களில் தென்மாநிலங்களிலும் இதுபோல மோசடி நடந்து நாமும் இதுபோன்ற சிக்கலை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications