பிஎப் இல் மாதம் பணம் பிடிக்கிறாங்களா.. இந்த நாளை மறந்திடாதீங்க..வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவிப்பு
சென்னை , திருவள்ளூர்,வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, புதுச்சசேரி உள்பட 10 இடங்களில் வருங்கால வைப்பு நிதி சிறப்பு முகாம் வரும் நவம்பர் 28ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என சென்னை வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஆண்ட்ரூ பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஆண்ட்ரூ பிரபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சார்பில் 'வைப்பு நிதி உங்கள் அருகில்' எனும் சிறப்பு முகாம் வருகிற 28-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை சென்னை, வேலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

சென்னை மாவட்டத்தை பொறுத்தமட்டில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அலுவலக வளாகத்தில் வருங்கால வைப்பு நிதி முகாம் நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கும்மிடிப்பூண்டி சின்ன ஓபுலாபுரம் ஜி.என்.டி. சாலையில் உள்ள ஷரோன் பிளை எனும் நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மறைமலைநகர் யூகால் பியூல் சிஸ்டெம்ஸ் லிமிடெட் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு மணிமங்கலம் முடிச்சூர் சாலையில் உள்ள டி.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் முகாம் நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்துக்கு காட்பாடி குடியாத்தம் சாலையில் உள்ள குளுனி கான்வென்டில் 'வைப்பு நிதி உங்கள் அருகில்' எனும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தவாசி அகஸ்தியா மெட்ரிக் பள்ளியில் இந்த முகாம் நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு கலவாய் ஜி.பி.நகர் ஆதிபராசக்தி என்ஜினீயரிங் கல்லூரியிலும், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு ஆம்பூர் பிளெஸ்ஸோ மெட்ரிக் பள்ளியிலும் வருங்கால வைப்பு நிதி முகாம் நடக்கிறது.
புதுச்சேரி மாவட்டத்துக்கு பக்கமுடியான்பேட்டை இன்டெக்ரா சாப்ட்வேர் நிறுவனத்திலும், காரைக்கால் மாவட்டத்துக்கு காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. கார்ப்பரேசன் கிளை அலுவலகத்திலும் இந்த 'வைப்பு நிதி உங்கள் அருகில்' சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம்" இவ்வாறு சென்னை வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஆண்ட்ரூ பிரபு தெரிவித்துள்ளார்.
இதனிடையே கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சுரேந்தர்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் குறைதீர்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது
கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், பாரதி பார்க் சாலை, வனக்கல்லூரி வளாகம் அருகில், சாய்பாபா காலனி, கோவை.
திருப்பூரில் சி.ஆர். கார்மெண்ட்ஸ், ஸ்ரீகோகுல கிருஷ்ணா நகர், டி.கே.டி. மில்ஸ் பல்லடம் சாலை, திருப்பூர்.
நீலகிரியில் ஜே.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோஸ் கார்டன் அருகில் ஊட்டி.
மேற்கண்ட இடங்களில் நடைபெற உள்ள இம்முகாமில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள். ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி சமர்ப்பிக்கலாம். மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படும்" என அறிக்கையில் கூறி உள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications