pf withdrawal new rules 2026: மாத சம்பளம் வாங்குவோர் பிஎஃப் பணம் எடுக்கும் முன் அறிய வேண்டியவை
சென்னை: பிஎஃப் பணம் தொடர்பான புதிய விதிகள் 2026ம் ஆண்டில் (PF withdrawal new rules 2026) எப்படி உள்ளது? யாரெல்லாம் எவ்வளவு பணம் எடுக்க முடியும், முந்தைய விதிகளுடன் ஒப்பிடும் போது, இப்போது எந்த அளவிற்கு எளிமையாக மாறி உள்ளது என்பதை மாத சம்பளம் வாங்கும் ஒவ்வொருவரும் அறிய வேண்டும். சில ஊழியர்கள் உடல் நலக்குறைவுக்கு முன்பு பணம் எடுக்கும் போது 50 சதவீதம் தான் எடுக்க முடியும். இப்போது 100 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படி முழு விவரங்களை பார்ப்போம்.
ஒரு ஊழியர் தனது 12 மாத கால பணிக்கு பிறகு, குறிப்பிட்ட தேவைகளுக்காக தனது பிஎஃப் தொகையை 100% வரை எடுக்க முடியும்.

வகை 1 - அடிப்படை சமூகத் தேவைகள்
மருத்துவச் சிகிச்சை (Illness என்று வெப்சைட்டில் குறிப்பிட்டிருக்கும்): உங்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ உடல்நிலை சரியில்லை என்றால், ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 3 முறை பணம் எடுக்கலாம். அதாவது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31ம் தேதிக்குள் 100 சதவீதம் வரை எடுக்க முடியும்.
கல்வி: உயர்கல்வித் தேவைகளுக்காக, மொத்த பணிக்காலத்தில் அதிகபட்சம் 10 முறை வரை பணம் எடுக்க அனுமதி உண்டு. அதாவது மாத சம்பளம் வாங்கும் நபர் பிஎஃப் கணக்கில் சேர்ந்து ஒரு வருடம் ஆன பின்னர், ரிட்டயர்டு ஆவதற்குள் 10 முறை மட்டுமே பிஎஃப் பணம் எடுக்க முடியும்.
திருமணம்: உங்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ திருமணச் செலவு என்றால், மொத்த பணிக்காலத்தில் அதிகபட்சம் 5 முறை பணம் எடுக்க முடியும். இதுவுமே பணியில் சேர்ந்த 12 மாதங்கள் கழித்து தான் பணம் எடுக்க முடியும்.
வகை 2 - வீடு தொடர்பான தேவைகள்
வீடு வாங்குதல் / கட்டுதல் / கடன் அடைத்தல் / புதுப்பித்தல்: சொந்தமாக வீடு தொடர்பான எந்தவொரு தேவைக்கும், உங்கள் மொத்த பணிக்காலத்தில் அதிகபட்சம் 5 முறை பணம் எடுக்க முடியும்.
வகை 3 - சிறப்புச் சூழல்கள் (Special Circumstances என்று பிஎஃப் தளத்தில் குறிப்பிடப்படடிருக்கும்)
காரணம் ஏதுமின்றி: உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது ஆனால் அதற்கு குறிப்பிட்ட காரணத்தை சொல்ல விரும்பவில்லை என்றால், ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 2 முறை மட்டும் இவ்வாறு பணம் எடுக்கலாம்.
முக்கியமான குறிப்பு: இந்தச் சலுகைகள் அனைத்தும் நீங்கள் வேலையில் சேர்ந்து 12 மாதங்கள் முடிந்த பின்னரே பொருந்தும். பிஎஃப் பணத்தை எடுக்கலாம் என்று அரசு அறிவித்திருப்பதன்பின்னணியில் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும். அவசர சூழலில் ஆபத்தான சூழலில் கைகொடுக்கவே இந்த பணத்தை பயன்படுத்தலாம். ஆனால் மறந்தும், பிஎஃப் இருக்கிறதே என்று கைவைத்து அடிக்கடி எடுக்க வேண்டாம். முடிந்தவரை மருத்துவ அவசரம், வீடு தவிரமற்ற சூழலுக்கு எடுக்க வேண்டாம். எடுக்காமல் இருந்தால் தான் ஆண்டு தோறும் வட்டி, அசல், ஏறி நல்ல தொகை உங்களுக்கு கிடைக்கும். 58 வயது வரை நீங்கள் பிஎஃப்பில் கைவைக்கவே இல்லை என்றால், மிகப்பெரிய தொகை உங்களுக்கு கிடைக்கும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications