PHH, AAY சர்க்கரை அட்டைகள்.. ஜூன் 30க்குள் ரேகை பதியாதோர் ரேஷன் கார்டு செல்லாதா? தமிழக அரசு விளக்கம்
சென்னை: ரேஷனில் நிலவும் முறைகேடுகளை தவிர்க்கவும், உரியவர்களுக்கு மட்டுமே ரேஷன் செல்வதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.. இந்நிலையில, ரேஷன் கார்டுதாரர்கள், கேஒய்சி சரிபார்ப்பை ஜூன் 30-க்குள் முடித்திருக்க வேண்டும் என்றும், அப்படி முடிக்காதவர்களின் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும் என்றும் தஞ்சை மாவட்டத்தில் ஒரு செய்தி விரைந்து பரவி கொண்டிருக்கிறது.. இதுகுறித்து அரசு விளக்கம் ஒன்றை தந்துள்ளது..
தமிழகத்தில் மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. அத்துடன் அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களை சென்றடைகிறது. அந்தவகையில் கோடிக்கணக்கான ரேஷன்தாரர்கள் நேரடியாகவே பலனைப் பெற்று வருகிறார்கள்.

எனினும், இலவச ரேஷன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே ரேஷன் உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதால்தான், கேஒய்சி சரிபார்க்கப்பட்டு வருகிறது.
வசதி படைத்தவர்கள்
அதுமட்டுமல்ல, ரேஷன் திட்டத்தை சிலர் தவறாகப் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்களாம்.. சிலர் போலி ஆவணங்களை வைத்து, ரேஷன் வாங்கி கொள்கிறார்களாம்.. மேலும் சில வசதியானவர்கள் கார்டுகளை வைத்து கொண்டு, ரேஷனும் வாங்குவதில்லையாம். இதனால் ரேஷன் மீதான நம்பகக்தன்மையும் மக்களிடம் குறையும் வாய்ப்புள்ளது..
எனவேதான், உண்மையான பயனாளர்களுக்கு ரேஷன் கிடைக்க வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய முடிவு செய்துள்ளதுடன், கேஒய்சி சரிபார்ப்பை இதுவரையில் முடிக்காத பயனாளிகள் உடனே அதை செய்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் போலியான ரேஷன் கார்டுகள் இருந்தால் அவை உடனடியாக நீக்கப்படும்.
கேஒய்சி சரிபார்ப்பது எப்படி
KYC சரிபார்ப்பை முடிக்க ரேஷன் கார்டு, ஆதார் கார்டு தேவைப்படும்.. இவை உங்கள் செல்போன் நம்பருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்களது ரேஷன் கடை அல்லது அரசு சேவை மையத்தின் உதவியுடன், நீங்கள் kyc சரிபார்க்கலாம்.
மாநிலத்தின் உணவு பாதுகாப்பு போர்ட்டலுக்கு சென்று, ரேஷன் கார்டு நம்பரை பதிவிட்டு, "ரேஷன் கார்டு KYC சரிபார்ப்பு நிலை" பட்டனை கிளிக் செய்து, உங்களது கேஒய்சி நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.
அல்லது, உங்களது ரேஷன் கார்டுடன் ரேஷன் கடைக்கு சென்று கைரேகைப் பதிவு அல்லது கருவிழி ஸ்கேன் செய்தால் போதும்.. ரேஷன் ஊழியர் உங்களுடைய கேஒய்சி சரிபார்ப்பை முடித்துவிடுவார்.
திடீரென பரவிய தகவல்
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அதில் "தஞ்சாவூர் மக்களே ஜூன் 30-ந்தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இப்படியொரு தகவல் பரவியதுமே, ரேஷன்தாரர்கள் குழப்பமும், கலக்கமும் அடைந்துள்ளனர்.. இந்த தகவல் உண்மையா? என்றும் தெரியாமல் தவித்துள்ளனர.. எனவேதான், இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம், விளக்கம் ஒன்றை தந்துள்ளது..
விளக்கம் தந்த அரசு
அதில், "இது தவறான தகவலாகும். AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. சமூக ஊடகத்தின் மூலம் வரப்பெற்ற செய்தியில் உண்மை ஏதுமில்லை என்று தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். தவறான தகவலைப் பரப்பாதீர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications