Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PHH, AAY சர்க்கரை அட்டைதாரர்களே? இன்றே கடைசி.. உடனே இதை முடிக்கலேன்னா.. ரேஷன் கார்டு கேன்சலாகிடும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இன்று மார்ச் 31க்குள் e-KYC செய்யவும், இல்லாவிட்டால் உங்களுக்கு ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் கிடைக்காது. எனவே, ரேஷன் கடைகளில் இலவச அரிசி பெறுபவர்கள் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் (இ-கேஒய்சிபதிவு) பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் இதனை எப்படி பதிவு செய்வது? இந்த திட்டத்துக்கு யார் யாரெல்லாம் தகுதியற்றவர்கள்?

ஏழை எளிய மக்களுக்காக பல திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.. அந்தவகையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இலவசமாகவும் மானிய விலையிலும் ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது.

PHH AAY Ration ration Card ekyc

குறிப்பாக, வறுமை கோட்டிற்கு கீழுள்ள (AAY) ரேஷன் கார்டிற்கு தலா 35 கிலோ, ஏழை குடும்பத்தை சேர்ந்த குடும்ப (பிஎச்எச்) கார்டிற்கு நபருக்கு 5 கிலோ அதிகபட்சம் கார்டுக்கு 20 கிலோ வரை இலவச அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.

ரேஷன் கார்டுகள்

இதற்காக ரேஷன் கார்டுகளை அரசு நேரடியாகவே வழங்குகிறது. நகர்ப்புறங்களில் ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 லட்சம் மற்றும் கிராமப்புறங்களில் ஆண்டு வருமான வரம்பு ரூ. 2 லட்சம் உள்ளவர்கள் ரேஷன் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இலவச அரிசி பெறும், இந்த 2 பிரிவு கார்டுதாரர்களின் குடும்ப தலைவர், உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் போன்றவற்றை அந்தந்த ரேஷன் கடைகளில் பதிவு செய்து, (இ- KY) அனுப்ப மத்திய அரசு அறிவித்திருந்தது.

போலிகள் நடமாட்டம்

அதாவது, அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க உத்தரவிட்டிருந்தது. இதற்காகவே, அனைத்து உறுப்பினரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, ஆதார் சரிபார்ப்பு வாயிலாக உறுதி செய்யப்படுகிறது.

காரணம், போலி ரேஷன் கார்டுகளை தடுக்கவும் (Duplicate/Fake Cards), தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கிடைப்பதை (Targeted PDS System) உறுதி செய்யவும், நியாவிலைக் கடைகளில் வெளிப்படைத்தன்மை (Transparency in PDS) கொண்டு வரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றே கடைசி

எனவே, இந்த பணிகளை, மார்ச் 31க்குள் அதாவது இன்றைக்குள் முடிக்க அவகாசமும் தரப்பட்டிருக்கிறது. அப்படி பதிவு செய்யாவிட்டால் இலவச அரிசி ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, இன்னும் பதிவு செய்யாமல் உள்ளவர்கள், அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது அரசு மையத்திற்கு சென்று, ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை கொடுத்து, பயோமெட்ரிக் தரவையும் (கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன்) வழங்க வேண்டும்... இதற்கு ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் தேவைப்படும். அனைத்து ரேஷன் கார்டுகளும் இனி டிஜிட்டல் வடிவில் கிடைக்கும். ரேஷன் வாங்கும்போது பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாகும்..

e-KYC செய்வதற்கான எளிய வழிமுறைகள் (Online Method)

- மாநில ரேஷன் கார்டு போர்டலுக்கு சென்று, லாக் இன் செய்து கொள்ள வேண்டும்

- உங்களது ரேஷன் கார்டு நம்பர், பாஸ்வேர்டு பதிவிட்டு உள்ளே நுழைந்து, "புதிய பயனர்" (New User) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்

- பிறகு e-KYC ஆப்ஷனையும், "Aadhaar Linking" அல்லது "e-KYC Update" என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்து, 12-இலக்க ஆதார் எண் (Aadhaar Number) பதிவிட வேண்டும்.

- இப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபியை பதிவிட வேண்டும்

- பின்னர் போட்டோ, உள்ளிட்ட ஆவணங்களை அப்லோட் செய்துவிட்டு, e-KYC-ஐ சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக
"Submit" பட்டனை அழுத்தினால், உங்கள் செல்போனுக்கு "e-KYC Successful" என மெசேஜ் வரும்.

யாரெல்லாம் தகுதியற்றவர்கள்

சொத்து வரம்பாக, நகர்ப்புறங்களில் 100 சதுர மீட்டருக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்பு வைத்திருப்பவர்கள், கிராமப்புறங்களில் 100 சதுர மீட்டருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், நகர்ப்புறங்களில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், கிராமப்புறங்களில் சொந்தமாக டிராக்டர் அல்லது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் ரேஷன் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+