சென்னையில் அமித்ஷாவுடன் சந்திப்பு.. எம் எஸ் தோனி பாஜகவில் இணைகிறாரா? பரபரப்பை கிளப்பிய நெட்டிசன்கள்
சென்னை: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பவள விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முனாள் வீரர் எம் எஸ் தோனியும் மத்திய உள்துறை அமைச்சர் அதித்ஷாவு சந்தித்துக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான டோனி இன்று தமிழகம் வந்து இருந்தார்.
சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டோனி வருகை தந்து இருந்தார்.

சென்னையில் டோனி
இதே நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவும் பங்கேற்று இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் ஸ்ரீனிவாசனுக்கு சொந்தமானது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் என்பதால், டோனி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் டோனியும் ஒருவொருக்கொருவர் சந்தித்து கை குலுக்கியதோடு நலம் விசாரித்தனர்.

டோனி பாஜகவில் சேர இருப்பதாக
இருவரும் சந்தித்துகொண்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக் கூட பெரிதாக்கி விடும் நெட்டிசன்கள், அமித்ஷாவும் டோனியும் சந்தித்தையும் சும்மா விட்டு வைப்பார்களா என்ன.. வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டனர். டோனி பாஜகவில் சேர இருப்பதாகவும் இதற்காகத்தான் அமித்ஷாவை சந்தித்ததாகவும் நெட்டிசன்கள் சிலர் பற்ற வைத்துவிட்டனர்.

புருவத்தை உயர்த்தியபடி..
இருவரும் கைகுலுக்கும் புகைப்படங்களோடு இந்த பதிவுகள் டிரெண்டிங் ஆனதால் செய்திகளை முழுமையாக தெரிந்து கொள்ளாத நெட்டிசன்கள் புருவத்தை உயர்த்தியபடி செய்தியை இணையதளங்களில் தேட ஆரம்பித்துவிட்டனர். டோனி ரசிகர்கள் பலரும் டோனியை சந்திக்க அமித்ஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டதாக ஒரு படி மேலே போய் ட்விட்டரில் பதிவிட்டதையும் காண முடிந்தது.

உங்களை அதிகம் மிஸ் செய்வதாக..
அதேபோல் விழாவில் கலந்து கொண்ட தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து 'எங்க தல தோனி' யின் அந்த சிரிப்பை பாருங்கப்பா.. எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். சில நெட்டிசன்களோ, இந்திய கிரிக்கெட் அணி உங்களை அதிகம் மிஸ் செய்வதாகவும்.. இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா அடைந்த படுதோல்வியை நினைவுப்படுத்தி பதிவிட்டு வருகின்றனர்.

தோனியின் கேப்டன்ஷியை ஒப்பிட்டு
உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதி ஆட்டத்தில் படு தோல்வி அடைந்து வெளியேறியது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவையும் மற்றும் சொதப்பாலாக ஆடி வரும் கே.எல் ராகுல் உள்ளிட்ட வீரர்களையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், தோனியின் கேப்டன்ஷியை ஒப்பிட்டும் பதிவிட்டு வருகின்றனர். இதனால், கடந்த சில தினங்களாக டோனி குறித்த பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில்..
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுமுன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications