“கேரளா+தமிழ்நாடு சேர்ந்து வளரட்டும்..” விஜய்க்கு வாழ்த்து சொன்ன பினராயி விஜயன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் விஜய்க்கு, கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது x பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோசப் விஜய்க்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Pinarayi Vijayan

ஜனநாயக அமைப்பில் மக்கள் வழங்கும் தீர்ப்பு மிகப் பெரிய பொறுப்பாகும். தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் மக்கள் நலன் ஆகிய மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கும் ஆட்சியாக உருவாகும் என நம்புகிறேன்.

கேரளமும் தமிழ்நாடும் நீண்டகால நட்பும் ஒத்துழைப்பும் பகிர்ந்து வரும் மாநிலங்களாகும். கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், இரு மாநில மக்களும் இணைந்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்ததால்தான் விஜய் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், பெரும்பான்மை விஜய்க்கு கிடைக்கவில்லை. எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் தங்கள் ஆதரவை அறிவித்தன. இதனை தொடர்ந்து ஐயுஎம்எல் கட்சியும் ஆதரவளித்தது.

எனவே பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களை விட இரண்டு எம்எல்ஏக்களை அதிகம் பெற்று விஜய் தற்போது முதலமைச்சராக தேர்வாகியிருக்கிறார். இதற்காக அவர் இடதுசாரி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்திருந்தன. இருப்பினும், குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே விஜய்க்கு ஆதரவளித்திருக்கின்றன. விஜய் மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுத்து செல்வார் என்று அக்கட்சிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன.

ஆனால், இன்று முதல்வராக பதவியேற்ற விஜய்யும், இதர அமைச்சர்களும் கடவுளின் பெயரால் பதவி ஏற்றுக்கொண்டனர். இது இடதுசாரி கட்சிகளுக்கு லைட்டாக ஷாக் கொடுத்திருக்கிறது.

எனவே அடுத்து வரும் நாட்களில் விஜய் மதச்சார்பற்ற அரசியலை நடைமுறைப்படுத்தப்போகிறாரா? அல்லது, திமுக விமர்சித்ததை போல பாஜகவின் செயல்திட்டங்களை அமல்படுத்தப்போகிறாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதேநேரம் எத்தனை நாட்களுக்கு இடதுசாரிகள் விஜய்க்கு ஆதரவளிக்க உள்ளன என்பதும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+