விதை கலைஞர் கருணாநிதி போட்டது.. என்னனே தெரியாத காலத்தில்.. ஐடி துறைக்கு அடித்தளமிட்ட “தி ரியல் டான்”
சென்னை : தான் வாழ்ந்த காலத்தில் நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. அது மட்டுமா அவரது சாதனை? அவரது ஆட்சிக்காலத்தில் அத்தனை துறைகளும் முன்னேற்றம் கண்டன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம்.
இன்று, கணினியும், தகவல் தொழில்நுட்பமும் இல்லாமல் எதுவும் இல்லை என்ற ஒரு சூழல் உள்ளது. அன்று கணினி என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கும் கணினி கல்வியை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி.
தமிழகத்தில் கணினிப் புரட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதிதான். இன்று ஐ.டி மிக வளர்ச்சியடைந்த துறையாகிவிட்டது. சென்னை ஐடி நிறுவனங்களின் முக்கிய மையமாகிவிட்டது. அன்று கருணாநிதியால் உருவாக்கப்பட்ட டைடல் பார்க் 25 வயதை எட்டிவிட்டது.

கருணாநிதியே முன்னோடி
முன்னாள் முதல்வர் கருணாநிதி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பி. கருணாநிதி பல முகங்களைக் கொண்டவர். பல துறைகளிலும் பணியாற்றியவர். தான் இறங்கிய துறைகளில் எல்லாம் யாரும் எளிதாக நிகழ்த்த முடியாத சாதனைகளைச் செய்தவர். பல விஷயங்களில் தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியாக இருப்பதாக மார்தட்டிக் கொள்கிறோம். அதன் ஒவ்வொரு அம்சத்திலும் கருணாநிதி என்பவரின் கைவண்ணம் இருக்கும்.

கணினி கல்வி
அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கணினி எனும் இயந்திரத்தையே நேரில் பார்த்திராத காலகட்டத்தில், அவர்களுக்கு கணினி கல்வி தந்தவர் கருணாநிதி. அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து மேல்நிலைப்பள்ளிகளில் 1998ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்தார் கருணாநிதி. முதன்முதலாக கணினியை கண்டபோதிலிருந்தே கணினியை படிக்கவும் ஆரம்பித்தனர் தமிழக கிராமப்புற மாணவர்கள்.

ஐ.டி புரட்சி
1996ல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்தபோது, தகவல் தொழில்நுட்பம் என்ற சொற்றொடர் வெகுசொற்பம் பேருக்கே அறிமுகமாகியிருக்கும். அப்போதுதான் அந்தத் துறை மொட்டு விட்டிருந்தது. அந்த காலகட்டத்திலேயே நாட்டிலேயே முதல் முறையாக 1997ல் தகவல் தொழில்நுட்ப கொள்கையை ஏற்படுத்தி புரட்சி செய்தார் கருணாநிதி.

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்
தமிழ்நாட்டில் IT Professionals ஏராளமாக உருவாகக் காரணமாக இருந்தவர் கருணாநிதி. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேடி வந்து தேர்வு செய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டியவர் கருணாநிதி. தகவல் தொழில்நுட்பத்துக்கு என தனித் துறையையும் 1998-ஆம் ஆண்டிலேயே உருவாக்கி, அதற்கு தனி அமைச்சரையும் நியமித்தார் கருணாநிதி.

சர்வம் கணினி மயம்
IT Task Force என்ற அமைப்பையும் உருவாக்கினார் கருணாநிதி. அரசுத் துறையைக் கணினி மயமாக்கினார். தரமணியில் டைடல் பார்க்கை உருவாக்கி, தரமணி முதல் மகாபலிபுரம் வரை ஐடி நிறுவனங்களின் முதலீடுகளைக் குவித்து, அந்தச் சாலையையே ஐடி சூப்பர் ஹைவேயாகவும் மாற்றியவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் வெகுமக்கள் கணினி என்ற பெயரைக் கேள்விப்படுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க்கை தமிழகத்தில் அமைத்தவர் கருணாநிதி. கருணாநிதி தொடங்கிய டைடல் பூங்காவிற்கே இன்று 25 வயதாகிவிட்டது.

சமூக நீதி
அனைத்து கிராமப்புற மாணவர்களுக்கும் கணினி வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதற்காக e-government agencyகள் வட்டாரங்கள் தோறும் அமைக்கப்பட்டன. இதன் மூலம் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ள முடிந்தது. 2000ஆம் ஆண்டிலேயே கருணாநிதி தலைமையிலான அரசு தமிழ்நாடு தொழில்நுட்ப வாரியத்தையும் அமைத்தது.

தமிழ் நெட்
இன்றைக்கு உலகத்தையே ஆட்சி செய்வது 'e' எனும் ஓரெழுத்து மந்திரம்தான். இணையத்தின் இன்றியமையாமையை அன்றே ஊகித்து அனைத்து பரிமாணங்களிலும் இந்தத் துறையை வளர்த்தெடுத்தார் கருணாநிதி. தமிழ் நெட் என்ற இணையக் கருத்தரங்க மாநாட்டினை 1999-ஆம் ஆண்டே நடத்தியவர் கருணாநிதி. உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகமும், 96 ஆட்சிக்காலத்திலேயே அமைக்கப்பட்டது.

1996-2001
1996 முதல் கருணாநிதி முதல்வராக இருந்த அந்த ஐந்தாண்டு காலத்தில் 600க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டன. சென்னையின், தரமணி, சோழிங்கநல்லூர் உள்ளிட்டபகுதிகள் இன்று ஐடி புகழிடமாக இருப்பதற்கும் அவரே காரணம். இத்தகைய பெரும் சாதனையை போகிறபோக்கில் நிகழ்த்திக் காட்டியதுதான் கருணாநிதியின் அசாத்திய சாதனை.

லேப்டாப்
2006 தேர்தலின்போது ஒவ்வொரு வீட்டிற்கும் வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்குவோம் என வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று வந்ததும் அதை நிறைவேற்றினார். அதுவும் தான் தொடங்கிய எல்காட் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வாயிலாகவே. அதேபோல, 2011 தேர்தலின்போது மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை அறிவித்தார். சில நாட்களில் ஜெயலலிதாவும் அந்த வாக்குறுதியையே அளித்து, ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களுக்கு வழங்கினார்.

ஐடி விங்
கருணாநிதி ஃபேஸ்புக், ட்விட்டரிலும் ஆக்டிவ்வாக இருந்தார். சமூக வலைதளங்கள் பரவலை முன்பே உணர்ந்து தனது கருத்துகளை அறிக்கைகளாகவும், துணுக்குகளாகவும் ட்விட்டரில் வெளியிட்டு வந்தார். ஐ.டி விங்கின் அவசியத்தை உணர்ந்து கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியையும் கட்டமைத்தார் கருணாநிதி. மற்ற அரசியல் கட்சியினரும், தொண்டர்களும் சோசியல் மீடியாவை பயன்படுத்துவதற்கு முன்பே அதில் முன்னோடி ஆக இருந்தவர் கருணாநிதி. நூற்றாண்டு இருளை தன் சிந்தனை ஒளியால் போக்கிய கருணாநிதியை இந்த நாளில் நினைவுகூர்வோம்.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ்












Click it and Unblock the Notifications