சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம்
சென்னை: "சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கேஸ் பாதுகாப்பானது என்றும் முன்பதிவு செய்யவேண்டியது இல்லை என்றும் என்று நகர கியாஸ் விநியோக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் பெறுவது எப்படி என்றும் அந்தநிறுவன அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல வீடுகளுக்கு சிலிண்டர் சரியாக கிடைப்பது இல்லை. கிராமங்களில் எல்லாம் சிலிண்டர் இல்லாத நிலையில், பலர் விறகு அடுப்புக்கும், மின்சார அடுப்புக்கும் மாறி வருகிறார்கள். சென்னையில் அப்படி மாறிவிட முடியாது. இந்த சூழலில் குழாய் மூலம் கியாஸ் இணைப்பை பெற்றுக் கொள்ள முடியும். இது பூமிக்கடியில் குழாய்கள் வழியாக வீடுகளுக்கு நேரடியாக சமையல் கியாஸ் வழங்கும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தொடர்ச்சியான வசதி என்று மத்திய அரசு கூறியுள்ளது.. சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, முக்கிய நகரங்களில் உள்ள வீடுகள் 3 மாதங்களுக்குள் இந்த வசதிக்கு மாற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்பதிவு செய்ய வேண்டியதில்லை
குழாய்வழி இயற்கை கியாஸ் இணைப்பு என்பது, ஒரு குழாய் மூலம் தண்ணீர் வழங்குவது போல் வீட்டிற்கு நேரடியாக இயற்கை கியாஸை வழங்குவது தான். சமையலறை அடுப்புகளில் பயன்படுத்தலாம். வீட்டு சமையல் பயன்பாடுகளுக்கு ஏற்ற கட்டுப்பாடுத்தப்பட்ட அழுத்தத்துடன் வழங்கப்படுகிறது, இதன் மூலம் 24 மணி நேரமும் கியாஸ் விநியோகம் செய்யப்படுவதுடன், சிலிண்டர் முன்பதிவு செய்யப்பட்டு காத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.
பாதுகாப்பானது
வீடுகளுக்கு குறைந்த அழுத்தத்தில் கியாஸ் விநியோகிக்கப்படுவதால் பாதுகாப்பானது என்று கூறுகிறது மத்திய அரசு. அதேபோல், பயன்படுத்திய கியாசுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் உள்ளிட்ட பல்வேறு பயன்களும் இருந்து வருகிறது. காற்றை விட லேசானது மற்றும் கசிவு ஏற்பட்டால் விரைவாக காற்றில் பரவிவிடும். இதனால் எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை. பல குடியிருப்பாளர்கள் ஒன்றாக விண்ணப்பிக்கும்போது குழாய் பதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பம் செய்வது குறித்து மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், வீட்டு உரிமையாளர்கள், வீட்டு வசதி சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வாடகைதாரர்கள், வணிக நிறுவனங்கள் (உணவகங்கள், தங்கும் விடுதிகள், அலுவலகங்கள்), தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்கள். அதேநேரம் அந்தந்தப் பகுதிகளில் குழாய் கியாஸ் இணைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட குழாய் கியாஸ் இணைப்பு நிறுவனத்திற்கு பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் பதிவுக் கட்டணத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்கள்.
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை அல்லது பிற அடையாளச் சான்று, முகவரிச் சான்று (மின்சாரக் கட்டண ரசீது, சொத்து ஆவணங்கள் அல்லது வாடகை ஒப்பந்தம் போன்றவை), பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், உரிமை அல்லது குத்தகைச் சான்று உடன், பெயர், தொடர்பு எண், முகவரி, இணைப்பின் வகை (வீட்டு உபயோகம், தொழில் அல்லது வணிகம்), விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் வழிகாட்டுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகள் விண்ணப்பதாரரைத் தொடர்பு கொள்வார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை எங்கு கிடைக்கிறது
இதுகுறித்து நகர கியாஸ் விநியோக நிறுவனங்களின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர்.பிரசாத் கூறும் போது, சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் டோரண்ட் கியாஸ் நிறுவனம் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி குழாய் பதித்து 5 ஆயிரம் பொதுமக்களுக்கு சமையல் கியாஸ் விநியோகம் செய்து வருகிறது. சென்னையில் மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், முகப்பேர், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, திருமங்கலம், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதியில் விநியோகம் செய்யப்படுகிறது.
உடனே இணைப்பு
எனவே வீடு அருகில் ஏற்கனவே இணைப்புகள் இருந்தால் உடனடியாக தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்கப்படும். இணைப்பு இல்லாத பகுதிகளில் மெயின் குழாய் இருக்கும் பகுதியிலிருந்து இணைப்பு கொண்டு வரப்பட்டு வழங்கப்படும். அரசு தற்போது பல்வேறு உதவிகளைச் செய்து வருவதால் வேலை விரைவாக நடந்து வருகிறது. குழாய் வழி இருப்பு மற்றும் ஆய்வு ஒப்புதல்களைப் பொறுத்து ஏற்கனவே உட்கட்டமைப்பு உள்ள பகுதிகளில், விண்ணப்பித்த சில வாரங்களுக்குள் இணைப்புகள் வழங்கப்படுகிறது. மின்சாரத்தைப் போலவே, கட்டணமும் பொதுவாகப் பயன்பாட்டின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
விரைவான சேவை
மற்ற எரிபொருட்களுடன் ஒப்பிடும்போது, இயற்கை கியாஸ் குறைவான கார்பன் வெளியேற்றத்தையே வெளியிடுகிறது. சாலைகளை கடந்து குழாய்களை கொண்டு செல்வது, சென்னை மாநகர பகுதிகளில் பல்வேறு இடர்பாடுகளுடன் சவாலான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இணைப்பு கோரி எங்களை தொடர்புகொள்பவர்களுக்கு விரைவான சேவை அளித்து வருகிறோம்" என்று கூறினார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications