எடப்பாடி பழனிசாமி பற்றி கேள்வி.. TTV தினகரனுக்கு சிக்னல்! பிரஸ் மீட்டை சட்டென முடித்த பியூஷ் கோயல்
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை, என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவத்திருக்கிறார். இந்நிலையில், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் செய்தியாளர் சந்திப்பு நடந்து. இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி பற்றிய கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளிக்க முயன்றபோது, பியூஷ் கோயல் செய்த செயல் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக தலைமையை கைப்பற்றுவதே டிடிவி தினகரினின் நோக்கம். ஆனால், அப்படியான நோக்கம் எதுவும் நிறைவேறாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இந்த மோதல்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று சொல்லப்பட்டது.

ராயப்பேட்டை கடையா எம்ஜிஆர் மாளிகை?
அதற்கேற்பதான் டிடிவியின் கருத்துக்கள் இருந்தது. "விஜய்யை கூவி கூவி கூப்பிட்டு பார்த்தார்கள். கரூர் சம்பவத்தை வைத்து பூச்சாண்டி எல்லாம் காட்டினார்கள். ஆனால் விஜய் உறுதியாக இருந்ததால்.. விரக்தி அடைந்து விட்டார்கள். உண்மை என்றைக்கும் கசக்கும், துரோகம் என்றைக்கும் அதன் வேலையை காட்டும். ராயப்பேட்டையில் கடை வைத்திருப்பதை போல.. ஜெயலலிதா படத்தை காட்டி கூட்டணிக்கு அழைக்கிறார்கள்" என்று எடப்பாடி பழனிசாமியை காட்டமாக விமர்சித்திருந்தார்.
"துரோக மனிதர் எடப்பாடி பழனிசாமி"
இதுகூட பரவாயில்லை, கடந்த ஆண்டு பசும்பொன்னில் நடந்த தேவர் குரு பூஜையில் பங்கேற்றிருந்த டிடிவி, "எங்களுக்கு எதிரி அதிமுக கிடையாது. எடப்பாடி பழனிசாமிதான் எங்களுடைய எதிரி. துரோக மனிதர் அவர்" என்று விமர்சித்திருந்தார். இந்த விமர்சனங்களை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவுவதற்கான சிக்னலையும் கொடுத்திருந்தார்.
செய்தியாளர் சந்திப்பு
இப்படி இருக்கையில்தான் இன்று, என்டிஏ கூட்டணியில் மீண்டும் ஐக்கியமாகியிருக்கிறார். கூட்டணி குறித்து பியூஸ் கோயலும், டிடிவியும் சந்தித்து பேசியிருந்தனர். இந்த சந்திப்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிடோர் இருந்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
எடப்பாடி தலைமை
டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள், "முதலமைச்சர் வேட்பாளர் யார்? எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கிறீர்களா?" என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளித்துக் கொண்டிருந்தபோது, சட்டென நயினார் நாகேந்திரனை பார்த்து, கிளம்பலாம் என கூறினார். இதனையடுத்து மொத்த கூட்டமும் மளமளவென களைய தொடங்கியது. கடைசி வரை எடப்பாடி பழனிசாமி தலைமை குறித்த கேள்விகளுக்கு டிடிவி பதிலளிக்கவில்லை.
உஷாரான எடப்பாடி
அதற்கேற்ப, எடப்பாடி பழனிசாமியும் உஷாரான பாணியில், டிடிவிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதாவது "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்த வாழ்த்தில், டிடிவி தினகரன் எங்களுடன் சேரவில்லை. அவர் என்டிஏ கூட்டணியில்தான் சேர்ந்திருக்கிறார் என்பதை தெளிவுப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பிரஸ் மீட்டும், அதைத் தொடர்ந்து வெளியான அறிக்கைகளும் பரவலாக விவாதங்களை தூண்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications