சென்னையில் திடீரென பெய்து வரும் பலத்த மழை.. இரவு முழுவதும் கனமழை இருக்காம்.. புதிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் இன்று மாலை திடீரென பெய்த கனமழை பெய்து வருவதவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அதேநேரம் மாலை நேரம் கனமழை வந்தால் பணிக்கு சென்றோர் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் இன்று மாலை முதல் திடீனெ கனமழை கொட்டி வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Places in South Chennai & places South of Chennai continuing to get good rain

இதேபோல் வேளச்சேரி, ஒஎம்ஆர் சாலை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வேலை முடிந்து வீடுகளுக்கு திரும்ப முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

இதேபோல் ஆலந்தூர், பல்லாவரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைபெய்து வருகிறது. இந்த மழை காரணமாக போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று இரவு முழுவதும் சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையமும் அடுத்த இரண்டு தினங்களக்கு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பரவலாக மழை பெய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+