1972.. ஆசை ஆசையாக பிளான் போட்ட எடப்பாடி! எனக்குத்தான் தடை இல்லையே! சசிகலா எடுத்த "கவுண்டர் அட்டாக்"
சென்னை: பாயிண்ட் வரட்டும்.. பாயிண்ட் வரட்டும் என்று காமெடியில் சொல்வது போலத்தான் கடந்த ஒன்றரை வருடமாக சசிகலா அதிமுகவை மீட்பேன், மீட்பேன் என்று சசிகலாவும் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் அடுத்தடுத்த வழக்குகள் காரணமாக அதிமுகவில் சசிகலாவால் எந்த விதமான அதிரடி நடவடிக்கைகளையும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில்.. எவ்வளவு பண்ணிட்டோம்.. இதை பண்ண மாட்டோமோ என்று முக்கியமான நடவடிக்கை ஒன்றில் சசிகலா இறங்க போவதாக அவரின் ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தசரா விடுமுறை காரணமாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் நவம்பர் 2ம் வாரத்திற்கு ஒத்திவைத்து உள்ளது. வழக்கில் வரும் தீர்ப்பை பொறுத்துதான் அதிமுகவில் யாருக்கு பவர் அதிகம் என்பது தெரியும்.
அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெற்றது செல்லாது என்பதுதான் இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வைத்து இருக்கும் கோரிக்கை. அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதுதான் ஓ பன்னீர்செல்வம் வைத்து இருக்கும் வாதம்.

சசிகலா
இந்த விவகாரத்தில் சசிகலா ஓ பன்னீர்செல்வம் ஆதரவுப் நிலைபாட்டில் தான் இருக்கிறார். நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டிய காலம் இது என்று சசிகலா கூறி வருகிறார். இந்த நிலையில்தான் பேசிக்கிட்டே இருந்தா எப்படி.. அடிச்சிக்கிட்டு என்பது போல சசிகலா முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சசிகலா அதிமுக அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக
அதிமுக கட்சி 1972ம் வருடம் அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்சியை எம்ஜிஆர் தொடங்கி 50 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில்தான் அதிமுக அலுவலகத்தில் இதற்கான விழா நடத்தப்பட உள்ளது. அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்ய உள்ளனர். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக இருப்பதால் இந்த விழாவை பெரிதாக கொண்டாட முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு முழுக்க இதற்காக பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விழா
இந்த நிலையில்தான் அதே நாள் அதிமுக அலுவலகம் சென்று எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செய்ய சசிகலா முடிவு செய்துள்ளாராம். அதிமுக அலுவலகம் உள்ளே செல்ல அவர் திட்டமிடவில்லை. மாறாக வெளியே சிலைக்கு மட்டும் மரியாதை செய்ய அவர் திட்டமிட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் சசிகலா தனது ஆதரவாளர்களை தி நகர் இல்லத்தில் சந்தித்தார். அப்போது சிலர்.. நீங்கள் அதிமுக அலுவலகம் செல்ல வேண்டும்.

சீல் வழக்கு
அதிமுக சீல் வழக்கில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதனால் அவர் இனி அதிமுக அலுவலகம் சென்றால் அது சட்டப்படி சிக்கலாகும். ஆனால் உங்களுக்கு எதிராக அப்படி எந்த விதமான தடையும் இல்லை. உங்களுக்கு எதிராக கோர்ட் ஆர்டர் எதுவும் இல்லை. அதனால் நீங்கள் அதிமுக அலுவலகம் சென்றால் சரியாக இருக்கும். அதிமுக தொடங்கப்பட்ட நாளில் சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்களாம்.

ஆலோசனை
ஓபிஎஸ்ஸுக்கு தானே தடை இருக்கு.. நமக்கு இல்லையே என்பதால் சசிகலாவும் அதிமுக அலுவலகம் செல்லும் திட்டத்தில் இருக்கிறாராம். அதன்பின் வழக்கு வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். அதிமுக தொடக்க நாளின் போது பெரிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தி எடப்பாடி ஸ்கோர் செய்து விட கூடாது என்பதால் சசிகலா இந்த "கவுண்டர் அட்டாக்கை" திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கண்டிப்பாக அக்டோபர் 17ம் தேதி ராயப்பேட்டையில் ஒரு "சம்பவம்" நடக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications