Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாவ்! மணிக்கு 245 கிமீ வேகமாம்.. சீறிப் பாயப்போகும் வந்தே பாரத்? பயணிகளுக்கு கிடைத்த ஸ்வீட் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தே பாரத் ரயில்கள் தற்போது அதிகபட்சமாக 160 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும் நிலையில், இதன் வேகத்தை அதிகரிக்க ரயில்வே ஆலோசித்து வருவது அறிந்த விஷயம் தான். இந்த நிலையில், வந்தே ரயிலின் வேகத்தை 245- கி.மீட்டர் வேகம் வரை அதிகரிப்பதற்கான திட்டம் ரயில்வேயிடம் உள்ளதாம்.

இந்திய ரயில்வேயை மேம்படுத்தும் பணிகளில் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகள் ஒருபக்கம் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் பயணிகளின் வசதிக்காக நவீன சொகுசு ரயில்களையும் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் சதாப்தி, ராஜ்தானி ரயில்கள் வரிசையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Planned to increase Vande Bharat Train Speed to upto 2 45 kmph trains: Says ICF

விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் ஆர்வம் கிடைத்துள்ளது. இதனால், சென்னை- மைசூரு, சென்னை - கோவை உள்பட நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 17 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து மேலும் பல ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, ஐ.சி.எப். பொதுமேலாளர் மால்யா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஐசிஎப்- இல் இதுவரை 21 வந்தே பாரத் ரயில்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயில் 180 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன்கொண்டது.

ஆனால், பயணிகள் பயன்பாட்டிற்கு 160 கி.மீட்டர் வேகத்தில் இயக்கவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிக்னல், தண்டவாளம் உள்ளிட்டவைகளை தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்திய பிறகுதான் ரயிலின் வேகத்தை அதிகரிக்க முடியும். இதற்கான பணியை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 130 கி.மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் வேகத்தை 160 ஆக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Planned to increase Vande Bharat Train Speed to upto 2 45 kmph trains: Says ICF

படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலின் வடிவமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. மணிக்கு 200 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட அலுமினியத்தால் தயாரிக்கப்படும் பெட்டிகளை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில்களை இந்த வேகத்தில் இயக்குவதற்கான தண்டவாள மேம்பாடு, சிக்கனல் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை ரயில்வே செய்து வருகிறது. எனவே அடுத்த மூன்று ஆண்டுகளில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

அதேபோல், மணிக்கு 245 கி. மீட்டர் வேகத்தில் செல்வதற்கான திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயில்கள் போலவே, வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பும் நடைபெற உள்ளது. சென்னை மட்டும் இன்றி ஐதாராபாத்திற்கும் இந்த பெட்டிகளை தயாரித்து அனுப்பப்பட இருக்கிறது. தற்போதுள்ள பெட்டிகளை விட இந்த ரயில் பெட்டி அகலமானதாக இருக்கும். 15 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 6 ஆயிரம் பேர் பயணம் செய்யும் அளவுக்கு இட வசதி கொண்டதாக இருக்கும்". இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+