நகைக்கடன் வாங்குறீங்களா? வங்கி கதவை தட்டும் முன் கவனிங்க… மறைந்திருக்கும் அபராத வட்டி ஷாக்
சென்னை: தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இன்று நிதி நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள் ஆக்கிரமித்துள்ளன. "ஜஸ்ட் 5 நிமிடத்தில் நகைக்கடன்", "மிகக்குறைந்த வட்டி" இப்படியெல்லாம் கவர்ச்சிகரமான வாசகங்கள், அவசரத் தேவைக்காகப் பணம் தேடும் நடுத்தர வர்க்கத்தினரை காந்தம் போல ஈர்க்கின்றன. ஆனால், வங்கிக் கதவை தட்டி நகையை அடகு வைக்கும் பலருக்கு, அந்த ஒப்பந்தப் படிவங்களில் ஒளிந்திருக்கும் நுணுக்கமான விதிகள் தெரிவதில்லை. அதில் ஒன்று அபராத வட்டி. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்
Penal Interest அதாவது அபராத வட்டி மற்றும் கூட்டு வட்டி முறைகள் சாமானிய மக்களின் சேமிப்பை சத்தமில்லாமல் கரைக்கக்கூடியவை.. பொதுவாக தங்கத்தின் விலை உயரும்போது, தங்களுக்குக் கூடுதல் கடன் கிடைக்கும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

தங்க நகைக்கடன்
ஆனால் அதே தங்கம் விலை வீழ்ச்சியடையும்போது அல்லது கடனைத் திருப்பி செலுத்துவதில் ஒரு நாள் தாமதம் ஏற்படும்போதுதான் உண்மையான சிக்கல் தொடங்குகிறது. பல தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் சில வங்கிகள் கூட, தவணைத் தேதியைத் தாண்டினால் 2% முதல் 12% வரை அபராத வட்டியை வசூலிக்கின்றன. இது சாதாரண வட்டியோடு சேரும்போது, அசலை விட வட்டி குட்டி போட்டு வளர்ந்து விடுகிறது.
குறிப்பாக கோயம்புத்தூர், சென்னை போன்ற மாநகரங்களில் அவசரத் தேவைக்காக அதிக வட்டிக்கு நகைக்கடன் வாங்குபவர்கள், இறுதியாக நகையை மீட்க முடியாமல் ஏலத்திற்கு விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
நகைக்கடன் வட்டி அபராதம்
இங்கு கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், LTV அதாவது Loan to Value விகிதம். தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதியாகும்..
ஆனால், சில நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க அதிகப்படியான தொகையை கடனாக வழங்குகின்றன. பின்னாளில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் குறைந்தால், கூடுதல் பிணையத் தொகை கேட்டு வங்கி நெருக்கடி கொடுக்கும். அப்போது பணம் செலுத்த தவறினால், எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல், நகைகள் ஏலத்திற்கு விடப்படும் அபாயமும் உள்ளது.
கடைசியில், குறைந்த வட்டி என நினைத்து உள்ளே சென்றேன், ஆனால் ஃபீஸ், இன்சூரன்ஸ் கட்டணம் எனப் பல்வேறு பெயர்களில் ஃபைன் பிடித்து கொண்டார்கள் என்று பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புலம்புகிறார்கள்.
நகைக் கடன் விதிமுறைகள்
அதுமட்டுமல்ல, பல நிறுவனங்கள் மாதந்தோறும் வட்டி செலுத்தும் முறையை (Monthly Interest) ஊக்குவிக்கின்றன. ஒரு மாதம் வட்டி கட்ட தவறினாலும், அந்த வட்டித் தொகை அசலோடு சேர்க்கப்பட்டு, அடுத்த மாதம் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது. இது கடனாளியை ஒரு மீள முடியாத சூழலுக்குள் தள்ளிவிடுகிறது.
நகையை அடகு வைக்கும்போது நாம் கையெழுத்திடும் விண்ணப்பத்தில் உள்ள குட்டி குட்டி எழுத்துக்களை யாரும் படிப்பதில்லை. அதில் "வட்டி விகிதம் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்" என்ற வாசகம் ஒளிந்திருக்கும். இதுதான் பின்னாளில் பெரும் சுமையாக மாறுகிறது.
அதனால் நகைக்கடன் பெறத் திட்டமிடுபவர்கள் முதலில் வட்டி விகிதத்தை மட்டும் பார்க்காமல், அபராத வட்டி எவ்வளவு, ஏல நடைமுறைகள் என்ன என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அரசு வங்கிகளில் வட்டி விகிதம் சற்று கூடுதலாகத் தெரிந்தாலும், அங்கு ஒளிவுமறைவற்ற வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தனியார் நிறுவனங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்கு பின்னால் இருக்கும் இத்தகைய அபராத வட்டி ஆபத்துகளை உணர்ந்து செயல்படுவதே தங்கத்தை காக்கும் ஒரே வழியாகும். விழிப்புணர்வுடன் செயல்படாவிட்டால், அவசரத் தேவைக்காக அடகு வைக்கப்பட்ட நகை, என்றென்றும் உங்கள் கையை விட்டுப் போகக்கூடும் என்று அலர்ட் செய்கிறார்கள் நிபுணர்கள்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications