பிரிஞ்சி நூல் நூலா பிரியுதே.. பிளாஸ்டிக் அரிசியில் பிரியாணி? பரபர வீடியோவுக்கு தமிழக அரசு விளக்கம்
சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என்று சோஷியல் மீடியாவில் பல்வேறு தவறான தகவல்கள் அவ்வப்போது பரவுவது வாடிக்கையாகும்.. அதுபோன்ற வதந்திகள் வரும்போதெல்லாம், தமிழக அரசு விளக்கம் தரும்.. அத்துடன், அதுகுறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சில ஓட்டல்களில் பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்ததுதுடன், அதுதொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன. இந்த வீடியோவுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தற்போதைய பிஸியான காலகட்டத்தில் இல்லத்தரசிகளும் வேலைக்கு செல்ல வேண்டியிருக்கிறது.. அப்போதுதான், குடும்பத்தை சமாளிக்க வேண்டியிருக்கிறது.. இதன்காரணமாக, பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில், 3 வேளையும் சமைப்பது என்பது சிரமமான விஷயமாகவும் உள்ளது. குறிப்பாக மதிய உணவுகளை சமைக்க முடிவதில்லை.

இதனால், ஓட்டல்களை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.. சென்னையிலும் இதே நிலைமைதான். இதுபோன்றவர்களை குறிவைத்தே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான சாலைகளில் தள்ளுவண்டி கடைகள் முளைக்க துவங்கிவிட்டன.. கறி, மீன் என அசைவ உணவு சமைக்க முடியாததால், பிரிஞ்சி என்ற சைவ பிரியாணிக்கு நல்ல கிராக்கி கிடைத்து வருகிறது.
பொட்டலங்கள் விற்பனை
அந்தவகையில், ரூ.20, ரூ.30, ரூ.40 என்று வெவ்வேறு கட்டணங்களில் பிரியாணி பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.. விலை குறைவு என்பதால், பலரும் இந்த பிரிஞ்சி சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.. இப்படிப்பட்ட 30 ரூபாய் பிரியாணி சமைப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக, வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் திடீரென வெளியாகியிருக்கிறது.
30 ரூபாய் பிரியாணி சமைப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக வெளியான இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை தந்தும் வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தகவல் சரிபார்ப்பகம்
இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான "தகவல் சரிப்பார்ப்பகம்" வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் இருப்பது பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் காட்சியல்ல. பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வதந்தி பரப்பி வருகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் சற்று சலசலப்பு நீங்கியிருக்கிறது. பொதுவாக நாம் சாப்பிடும் அரிசியிலேயே நிறைய கலப்படங்கள் வந்துவிட்டன. குறிப்பாக, பிளாஸ்டிக் அரிசியை சேர்த்து விற்பதாக அவ்வப்போது செய்திகளும் கசிந்தபடியே உள்ளன.
பிளாஸ்டிக் அரிசி
பார்ப்பதற்கு நல்ல அரிசி மாதிரியே இருப்பதால், அது பிளாஸ்டிக் அரிசியா? என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை. எனினும், இதனை நாம வீட்டிலேயே சோதித்து பார்க்கலாம். ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் அரிசியை போட வேண்டும். அரிசி தண்ணீரில் மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசியாகும்.. கிளாஸின் அடியிலேயே தங்கிவிட்டால் அது நல்ல அரிசி என்று அர்த்தம்.
அதேபோல, அரிசிகளை போட்டு தீப்பெட்டியால் எரித்து பார்க்க வேண்டும்.. அரிசி கருகி எரிந்ததுமே பிளாஸ்டிக் வாடை வந்தால் அது போலியான அரிசி.. அதுவே சுத்தமான அரிசியாக இருந்தால் பிளாஸ்டிக் வாசனை வராது என்பது கவனிக்கத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications