10 வயது மூத்த பெண்ணுடன் கள்ளக்காதல்.. மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடி உதை.. கானா பாடகரின் மகன் கைது!

மனைவியை கொடுமைப்படுத்திய பின்னணி பாடகர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடி உதை.. கானா பாடகரின் மகன் கைது!

    சென்னை: ஒரு பக்கம் தன்னைவிட 10 வயது மூத்த பெண்ணுடன் கள்ள உறவு.. இன்னொரு பக்கம் மனைவியிடம் வரதட்சணை கொடுமை.. என வாழ்ந்து வந்துள்ளார் பிரபல கானா பாடகர் பழனியின் மகன்.. இப்போது இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை புளியந்தோப்பில் வசித்து வருபவர் பிரபல கானா பாடகர் பழனி. இவருடைய மகன் தரணி.. 24 வயதாகிறது.. இவரும் திரைப்படங்களில் பாடி வருகிறார்.

    விஜயபானு என்ற 22 பெண்ணை, தரணி காதலித்தார்.. 5 வருட காதல்.. இறுதியில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் போன ஜூலை மாதம் கல்யாணம் நடந்தது.

    அடமானம்

    அடமானம்

    விஜயபானு வீட்டார் 20 சவரன் நகை, உள்ளிட்ட சீர்வரிசையை தந்து பெண்ணை அனுப்பி வைத்தனர். ஒருசில நாட்கள்தான் இருவரும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.. மெதுவாக வேலையை காட்டி உள்ளார் தரணி.. விஜயபானுவுக்கு போட்ட நகைகளை வாங்கி அடமானம் வைத்துள்ளார்.. மேலும் நகைகள், பணம் வேண்டும் என்று கேட்டு, விஜயபானுவை கொடுமைப்படுத்த தொடங்கியதாக தெரிகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் ரணமாகவே போனது.

    சந்தேகம்

    சந்தேகம்

    இந்த சமயத்தில், கணவனின் நடவடிக்கையில், விஜயபானுவுக்கு சந்தேகம் ஆரம்பித்தது. ஒரு நாள் அவரது செல்போனை ஆராய்ந்தபோது தான் குட்டு வெளிப்பட்டது. தன் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் மிக மிக நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும், ஆபாசமாக இருக்கும் வீடியோக்களையும் கண்டு அதிர்ந்தார்.

    விஜயபானு

    விஜயபானு

    இதை பற்றி, கணவனிடமே கேட்டுவிட்டார் விஜயபானு.. ஆனால், பதிலாக கிடைத்தது என்னவோ அடியும், உதையும்தான்.. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கவும், வாழக்கையில் மொத்தமாகவே ஏமாந்து போய்விட்டோம் என்று மனம் நொந்த விஜயபானு, தான் பெற்றோரிடம் இதை சொல்லி கதறி அழுதார். இதையடுத்துதான் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் சொல்லவும், விசாரணை ஆரம்பமானது.

    2 பிள்ளைகள்

    2 பிள்ளைகள்

    அப்போதுதான், தரணிக்கு நித்யா என்ற ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்துள்ளது.. அந்த பெண் ஏற்கனவே கல்யாணம் ஆனவராம்.. 2 பிள்ளைகளும் இருக்கிறார்களாம்.. தரணியை விட அந்த பெண் 10 வயது பெரியவராம்.. 3 வருடமாகவே இந்த கள்ளக்காதல் இருந்துள்ளது.. இந்த நெருக்கத்தில் இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளதாம்.. இதையெல்லாம் மறைத்துதான், விஜயபானுவுடன் கல்யாணம் நடந்துள்ளது.

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    இதையடுத்து போலீசார் தரணியை கைது செய்துள்ளனர். மேலும், தரணிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது அம்மா ராஜேஸ்வரி, அக்கா பரணி, பாட்டி நவநீதம் ஆகியோர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல்,வரதட்சணை கொடுமை உள்ளீட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    விஜயபானுவை 5 வருடமாக தரணி காதலித்து வந்தார் என்கிற நிலையில், 3 வருடமாகவே நித்யாவுடன் கள்ள உறவும் தொடர்ந்து வந்துள்ளது.. மனைவியிடம் வரதட்சணை டார்ச்சர் செய்து, நித்யாவுடன் உல்லாச வாழ்க்கையையும் வாழ்ந்து வந்துள்ள இந்த கானா பாடகரின் செயல் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+