செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க கூடாது.. ஆளுநருக்கு பறந்த கடிதம்.. எழுதியது யாரு பாருங்க?
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க கூடாது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சராக்க பரிந்துரை செய்தாலும் அதனை ஏற்கவே கூடாது என்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரபரப்பான கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு கைது செய்தனர். செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தொடர்ந்து ஜாமீன் வழங்க மறுத்தது.

இறுதியாக நேற்றைய தினம் டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி நேற்று விடுதலையானார். இதற்கிடையே தான் புதிய தகவல் பரவி வருகிறது.
அதாவது உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதல்வர் பதவி வழங்கப்படும்போது, செந்தில் பாலாஜியும் மீண்டும் அமைச்சராக்கப்படுவார். செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இதுபற்றி இன்னும் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் செந்தில் பாலாஜி மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அதிக பாசம் உள்ளதாகவும், இதனால் அவர் விரைவில் மீண்டும் அமைச்சராக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரபரப்பான கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்டர் சர்வீசஸ் முன்னாள் ராணுவத்தினர் நல கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் என்பது மொத்தம் 9 பக்கங்களை கொண்டுள்ளது. கடிதத்தை அந்த கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சுரேஷ் பாபு எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றினேன். கடந்த 2015ம் ஆண்டில் ஓய்வு பெற்றேன். இந்தியன் இன்டர் சர்வீசஸ் முன்னாள் ராணுவத்தின் நல கூட்டமைப்பின் நிறுவன தலைவராக பொறுப்பு வகித்து வுருகிறேன். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்று இந்த கூட்டமைப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் ஒரு பரபரப்பான செய்தி போய் கொண்டிருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அதேவேளையில் அவர் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. தற்போது செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் தான் வெளியே வந்துள்ளார்.
முதல்வர் பரிந்துரையில் ஒருவரை ஆளுநர் அமைச்சராக்க வேண்டும் என கூறப்பட்டாலும் கூட செந்தில் பாலாஜி போன்ற தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியஒருவரை அமைச்சராக்குவது என்பது அரசியலமைப்பு மீதான மரியாதையை கெடுத்து விடும். அதேபோல் மாநில மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு எதிரானதாக அமையும்.
மேலும் நிதி சார்ந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு காவலில் வைக்கப்பட்ட ஒருவர் அமைச்சர் அலுவுலகத்தில் இருப்பதற்கான தகுதியை இழந்தவராக கருத வேண்டும். ஒரு முன்னாள் ராணுவ வீரராக ஒன்றை கூறி கொள்கிறேன். தகுதியான, பொருத்தமான நபரை அமைச்சராக நியமிப்பதன் மூலம் அரசியலமைப்பை சமூகத்தில் நிலைநாட்டும்படி உங்களை கேட்டு கொள்கிறேன். இதனால் செந்தில் பாலாஜியை அமைச்சராக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தால் அதனை நிராகரிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்'' என கூறப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications