Exclusive: 28 லட்சம் சம்பளம் வாங்கிய வங்கி ஊழியர் அந்த முடிவை எடுத்தது ஏன்? ரம்மியில் நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் மிகப்பெரிய வங்கி ஒன்றில் பல லட்சம் சம்பளத்தோடு வசதியாக வாழ்ந்து வந்த நபர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. அவரின் தற்கொலை குறித்து பார்க்கும் முன் 2 அதிர்ச்சி தரும் கதைகள்.. கொஞ்சம் மனதை திடப்படுத்திக்கொண்டு படியுங்கள்!
Recommended Video
கேரளாவை சேர்ந்தவர் எம்ஏ அப்துல் சாலி.. அவரின் மனைவி ஷீபா. பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் கோட்டையத்தில் தனி வீட்டில் மனைவியோடு வசித்து வந்தார். மகன்கள் எல்லோரும் துபாயில் வாழ்ந்து வந்தனர். கொஞ்சம் வசதி வாய்ப்பான குடும்பம்.
இந்த நிலையில்தான் அந்த வீட்டிற்குள் திருடுவதற்காக 23 வயதே ஆன முகமது பிளால் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்றார்.

மோதல்
ஆனால் அங்கு நடந்த மோதலில் எம்ஏ அப்துல் சாலி.. அவரின் மனைவி ஷீபா இருவரையும் கொன்றுவிட்டு அங்கிருந்த பணம் நகைகளை திருடிவிட்டு முகமது பிளால் தப்பித்தார். போலீஸ் விசாரணையில் முதலில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. திருட்டுதான் கொலைக்கு காரணம். ஆனால் ஏன் திருடினார் என்பது பற்றி தெரியவில்லை. போலீஸ் தீவிர விசாரணைக்கு பின் முகமது பிளாலை கைது செய்தது.

விசாரணை அதிர்ச்சி
அவரிடம் கேள்வி எழுப்பியபின்தான் அந்த அதிர்ச்சி காரணம் வெளியானது. கல்லூரி படித்து முடித்த முகமது பிளால் அதற்கு முன் திருடியது இல்லை. குற்றப்பின்னணி கொண்டவர் இல்லை. அது அவரின் முதல் திருட்டு.. முதல் கொலை.. முதல் கிரைம். அதற்கு அவர் சொன்ன காரணம் ஆன்லைன் ரம்மி! என்னிடம் காசு இல்லை.. ஆன்லைன் ரம்மியில் இழந்துவிட்டேன். அதனால் மேலும் ரம்மி விளையாட இப்படி திருட போய் கொலையில் முடிந்துவிட்டது என்று முகமது பிளால் கண்ணீருடன் அதிர்ச்சி வாக்கு மூலம் அளித்தார்.

கதை 2
அதே கேரளாவில் சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய கேஸ்தான் பிஜு லால் கேஸ். தனியார் நிறுவனத்தில் தலைமை நிதி நிர்வாகியாக இவர் பணியாற்றி வந்தார். இவர்தான் அங்கு தலைமை பொருளாளர். தொடக்கத்தில் போர் அடிக்கிறது என்று பிஜு லால் ஆன்லைன் ரம்மி ஆடி இருக்கிறார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அலுவலக நேரத்தில் ஆடுவது, விடுமுறை நாளில் அலுவலகம் வந்து முழு நேரமும் ரம்மி ஆடுவது என்று இருந்துள்ளார். வெகு சில நாட்களில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமை ஆகியுள்ளார்.

ஏமாற்றம்
தொடக்கத்தில் சில ஆயிரங்களை வென்றவர் போக போக அதிக தொகையை போட்டு தனது சேமிப்பை எல்லாம் காலி செய்துள்ளார். தனக்கு இருந்த நிலத்தை ரகசியமாக விற்று அதையும் ரம்மியில் இழந்துள்ளார். இப்படி மொத்தமாக 70 லட்சம் ரூபாயை பிஜு லால் முதலில் இழந்தார். ஆனால் அவருக்கோ வெறி அடங்கவில்லை. தொடர்ந்து ரம்மி ஆடியவர்.. தனது மனைவியின் கணக்கில் இருந்து பணம் எடுத்து அதை காலி செய்தார். அதன்பின் அலுவலகத்தில் சக ஊழியரிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாய் திருடினார்.

நிறுவன பணம்
இவர்தான் அந்த நிறுவனத்தின் பொருளாளர் என்பதால் அதை பயன்படுத்தி அந்த நிறுவன கணக்கில் இருந்து வார வாரம் லட்சக்கணக்கில் திருட்டுத்தனமாக பணம் எடுத்தார். விளைவு அலுவலகத்திற்கு ஒரு கட்டத்திற்கு மேல் தெரிய வந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கடைசியில் விசாரணையில் பிஜு லால் மொத்தம் 2.74 கோடி ரூபாயை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள்.. 2.74 கோடி ரூபாய்.. வங்கி கணக்கில் இருந்து மட்டும் ஒன்றரை கோடியை எடுத்துள்ளார்!

அதிர்ச்சி
இது பெருங்கடலில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட வெறும் இரண்டு துளிகள்தான்.. கேரளாவில் மட்டும் இதேபோல் ஆன்லைன் ரம்மி மரணங்கள் 15 பதிவாகி உள்ளது. அதிகாரபூர்வமற்ற வகையில் பல ரம்மி மரணங்கள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டிலும் சென்னையில் ஐடி ஊழியர், கல்லூரி மாணவர், அதன்பின் கோவையில் ஒருவர் என்று பலர் மரணம் அடைந்துள்ளனர். ரம்மியில் எல்லாத்தையும் இழந்துட்டேன் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு நிதிஷ் குமார் என்ற இளைஞர் சென்னையில் தற்கொலை செய்துவிட்டார். அவர் கல்லூரி படிக்கும் மாணவர்!

ஆன்லைன் ரம்மி
இதேபோல்தான் சமீபத்தில் புதுச்சேரி கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஜயகுமார் ஆடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். நான் இதுக்கு அடிமை ஆகிட்டேன்.கணக்கு பார்த்தால் ரூ.30 லட்சத்துக்கு மேல் ஆன்லைன் ரம்மியில் விட்டுள்ளேன். என்னால எதுவும் செய்ய முடியல. என் வாழ்க்கையே போயிடுச்சு. நான் போறேன்.. என்று கூறிவிட்டு விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார். இதெல்லாம் அங்கங்கே நடந்த சில கேஸ்களின் எடுத்துக்காட்டுகள்.

சென்னை
இப்படி பல கேஸ்களுக்கு இடையில்தான் நேற்று சென்னையில் அந்த வங்கி ஊழியர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். மணிகண்டன் என்ற அந்த நபர் சென்னையில் இருக்கும் பார்க்லேஸ் வங்கி கிளையில் பணியாற்றி வந்தார். இந்த வங்கி பிரிட்டனை சேர்ந்த பெரிய வங்கி ஆகும். இதன் கிளையில் உயரிய பொறுப்பில் மணிகண்டன் இருந்தார்.

வருமானம்
இவரின் மாத வருமானம் 2 லட்சத்திற்கும் மேல். வருட வருமானம் பிடித்தம் போக 28 லட்சம் ரூபாய். வங்கியில் வேலை பார்க்கும் இவர் இதை எப்படி வேண்டுமானாலும் முதலீடு செய்து சொகுசாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் கடந்த சில மாதமாக இந்த பணத்தை எல்லாம் ஆன்லைன் ரம்மியில் மணிகண்டன் போட்டு வீணடித்து இருக்கிறார். முதல் லாக்டவுனில் போர் அடிக்கிறது என்று மணிகண்டன் இந்த விளையாட்டை துவங்கி உள்ளார். ஆனால் சில மாதங்களில் இதற்கு அடிமையாகிவிட்டார்.

அடிமை
தொடக்கத்தில் சேமிப்பு பணங்களை எல்லாம் கரைத்துவிட்டார். ஆனாலும் ஆன்லைன் ரம்மியில் அவரால் அவ்வப்போது சில ஆயிரங்களை தவிர பெரிதாக எதுவும் வெல்ல முடியவில்லை. இதனால் எப்படியாவது பணம் வெல்ல வேண்டும் என்ற வெறியில் நகைகளை விற்றுள்ளார். பின்னர் வெளியே கந்துவட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். இப்படி மீட்டர் வட்டிக்கு இவர் 1 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. உண்மையான கடன் மதிப்பு பல கோடிகளை நெருங்கலாம் என்று கூறப்படுகிறது.

கடன் தொல்லை
இந்த கடன் தொல்லையால் மணிகண்டனுக்கும் மனைவி பிரியாவிற்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. கடந்த புத்தாண்டு இரவு இவர்கள் மோதல் முற்றியுள்ளது. அப்போது பணம் எங்கே.. எப்படி எல்லாத்தையும் இழந்தீங்க.. ஏன் இவ்வளவு கடன் என்று பிரியா மணிகண்டனிடம் விசாரித்து இருக்கிறார். அதற்கு மணிகண்டன் கூடுதல் பணம் கேட்டு பிரியாவை கடுமையாக திட்டி உள்ளார். இதற்கு பிரியா மறுப்பு தெரிவித்ததால் அங்கேயே பிரியாவை கிரிக்கெட் மட்டையால் மண்டையில் அடித்து கொன்றுள்ளார்.

கொலை
அதோடு இரண்டு குழந்தைகள் தரன்(10), தாஹன் (1) ஆகியோரையும் அங்கேயே கொன்றுவிட்டு.. பின்னர் சமையல் அறையில் கைலியை மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் ஆன்லைன் ரம்மியில் இவர் 2 வருடமாக விளையாண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா,குஜராத் , டெல்லி என்று பல மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி உயிர்கொல்லி நோயாக மாறியுள்ளது. மொத்தமாக தேசிய அளவில் இதற்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications