+2 ரிசல்ட்: சைலண்டா நடக்கும் மாற்றத்தை கவனிச்சீங்களா? தொடர்ந்து அதிகரித்து வரும் தேர்ச்சி விகிதம்!
சென்னை: கடந்த 4 ஆண்டுகளாகவே, பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் 0.49% அளவுக்கு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பாஸ் பர்சன்டேஜ் தொடர்ந்து அதிகரித்து வருவது நல்ல மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். அதன்படி, தேர்வு எழுதிய 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகளில் 95.03% பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

தேர்ச்சி விகிதம்
பிளஸ் 2 தேர்வில் 95.03 % மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். எப்போதும் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள்: 96.70 %, மாணவர்கள்: 93.16 % தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை காட்டிலும் 3.54% கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர்.
பள்ளி வாரியான தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகள் - 91.94%
அரசு உதவிப் பெறும் பள்ளிகள் - 95.71%
தனியார் பள்ளிகள் - 98.88%
இருபாலர் பள்ளிகள் - 95.30%
பெண்கள் பள்ளிகள் - 96.50%
ஆண்கள் பள்ளிகள் - 90.14%
அதாவது, ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகள் இந்த ஆண்டு 6.36 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கின்றன.
தேர்ச்சி விகிதம் அதிகம்
கடந்த ஆண்டில் பதிவான 94.56 தேர்ச்சி சதவிகிதத்தை காட்டிலும், நடப்பு ஆண்டில் 0.49 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. சதவிகித அடிப்படையில் பார்க்கும்போது அரை சதவிகிதம் என்பது சிறியது போல தெரிந்தாலும், சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் இந்த தேர்ச்சி விகித அதிகரிப்பு முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு
முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டில் 7.60 லட்சம் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 7.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 94.56 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். 2 ஆயிரத்து 478 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பதிவு செய்தன. மாவட்ட வாரியாக 97.45 சதவிகித தேர்ச்சியுடன், மாநில அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்து இருந்தது.
2023
அதற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,03,385 மாணவ மாணவிகள் தேர்வெழுதினர். அதில் 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். அந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.03% என உயர்ந்தது.
2022ல்
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 8,06,277 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 7,55,988 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அந்த ஆண்டில் 93.76% மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்தனர். கடந்த 4 ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வில், மொத்தம் 7,92,494 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இந்த நிலையில், 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேர்ச்சி விகிதம் 95.03% ஆக தற்போது அதிகரித்து உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications