Plus Two Results 2023 Tamil Nadu: +2 ரிசல்ட்..விருதுநகர்,திருப்பூர், பெரம்பலூர் டாப் 3 மாவட்டங்கள்
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டார். விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாம் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
விருதுநகர் 97.85 % மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். திருப்பூர் 97.79% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளனர். பெரம்பலூர் 97.59% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற்றன. இந்த தேர்வின் முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டது. ஆனால், நீட் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளதால், நீட் தேர்வுக்குப் பிறகு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் (TNDGE) 12ஆம் வகுப்பு முடிவை இன்று வெளியிட்டுள்ளது. தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இந்தநிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கங்களில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரிகளிலும் தெரிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
www.tnresults.nic.inhttp://dge.tn.gov.inhttp://dge1.tn.gov.inhttp://dge2.tn.gov.in
தேர்வர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் எவ்வித கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
மதிப்பெண் முடிவுகளை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.03 சதவிகிதம் ஆகும். இதில் மாணவியர் 4,05,753 பேர் அதாவது 96.38% தேர்ச்சி அடைந்துள்ளனர்
மாணவர்கள் 3,49,697 பேர் 91.45% தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 1 100.00% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விருதுநகர் 97.85 % மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். திருப்பூர் 97.79% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளனர். பெரம்பலூர் 97.59% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர். அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் என்பது உயர் கல்வி படிப்பதற்கான நுழைவுச்சீட்டுதான். பொறியியல், மருத்துவம் மட்டும்தான் உயர்கல்வி என்பதில்ல. மாணவர்களுக்கு எத்தனையோ வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications