பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி அப்ளை செய்வது? முழு விவரம்
சென்னை : பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், இன்று முதல் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 8ஆம் தேதி வெளியானது. இதில் தமிழ்நாடு முழுவதும் 94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து சரிபார்க்கலாம்.
அதன் அடிப்படையில் மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதே தளத்தில், "Application for Retotalling/ Revaluation" என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து, வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
அதற்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அந்த விண்ணப்பத்தை 2 நகல்கள் பூர்த்தி செய்து இன்று (மே 31) தொடங்கி ஜூன் 3 மாலை 5 மணிக்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பங்களை தேர்வர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
மறுகூட்டலுக்கான கட்டணமாக உயிரியல் பாடத்துக்கு ரூ.305; இதர பாடங்களுக்கு ரூ.205 செலுத்த வேண்டும். மறுமதிப்பீடுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.505 கட்டணமாக செலுத்த வேண்டும். மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இந்த கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications