Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே ஹேப்பி நியூஸ்.. அக்கவுண்டுக்கே வந்த 2000! உங்களுக்கு வரலையா? இதை பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை தலா 2000 ரூபாய் என மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ், 20வது தவணையாக சுமார் 9.20 கோடி விவசாயிகளுக்கு ரூ.20.50 ஆயிரம் கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. சில விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என கூறி வரும் நிலையில், அவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்..

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 ரூபாயை நான்கு மாத இடைவெளியில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி நேரடியாக தகுதியுள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வர வைக்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 17 தவணைகளாக விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் நிதி உதவி வரவு வைக்கப்பட்டுள்ளது.

PM Kisan 20th Instalment

இந்த நிலையில் இந்த ஆண்டு 2வது முறையாக பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 20வது தவணை நிதி உதவியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று விடுவித்தார். நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 20வது தவணையை பிரதமர் மோடி விடுவித்தார். இதன் மூலம் சுமார் 9 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் சில விவசாயிகளுக்கு அரசு வழங்கும் பிஎம் கிசான் ஊக்கத்தொகையான 2000 ரூபாய் வழக்கமாக பயன்படுத்தி வரப்படும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து விவசாயிகள் பலரும் அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் கூட்டுறவு வங்கி கணக்குகளில் அந்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.

மேலும் கோ-ஆபரேட்டிவ் அல்லது வேறு வங்கிகளில் அக்கவுண்ட் இருந்தாலும் அதிலும் சரிபார்த்துக் கொள்வது அவசியம் என்கின்றனர் அதிகாரிகள். ஆதார் எண் அடிப்படையிலேயே பணம் வங்கி கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்படுகிறது. மேலும் மொபைல் எண் விவரங்களும் சரிபார்த்த பின்பு தான் பணம் வர வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒரே பெயர், ஆதார் எண், மொபைல் எண் ஆகியவை கொடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்டுகள் இருந்தால் அதில் வரவு வைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறனர். மேலும் பல விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி கணக்குகளில் 2000 ரூபாய் பணம் வர வைக்கப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு பணம் வரவில்லை என விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை.

கூட்டுறவு வங்கி கணக்குகளிலும் பிற வங்கி கணக்குகளும் சரிபார்த்தால் நிச்சயம் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கும் என்கின்றனர். ஒரு வேலை அப்படி வரவில்லை என்றால் உடனடியாக https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பயனாளிகளின் தங்கள் நிலையை அறியலாம். தொடர்ந்து உங்கள் ஆதார் எண் அல்லது பிஎம் கிசான் திட்ட எண்ணை கொடுத்தால் உங்களது தரவுகளை பெற்றுக் கொள்ளலாம். அதில் விவசாயிகள் தங்கள் மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்றும் சரிபாத்துக் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+