பிஎம் கிசான் ₹2000 தவணை: உங்க லிஸ்டில் மாற்றம் இருக்கா? பணம் வராதவர்கள் உடனே செய்ய வேண்டியது இதுதான்
சென்னை: மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.. இப்போதும் 22-வது தவணை நிதியாக 19,000 கோடி ரூபாய் விடுவிக்கப்படுகிறது. இந்த நிதி நேரடியாக 9.32 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்துள்ளது.. தமிழகத்திலும் லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த நிதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சிலருக்குப் பணம் வந்து சேராதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.. அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
விதை, உரம் போன்ற இடுபொருட்களை வாங்கவும், விவசாயக் குடும்பங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், விவசாயிகளுக்கு வருமான ஆதரவு அளிக்கும் நோக்கில் பிஎம் கிசான் சம்மான் நிதி வழங்கப்படுகிறது.. இதற்காக வழங்கப்படும் தவணை தொகை நேரடியாகவே வங்கி கணக்கில் விழுகிறது.

பிஎம் கிசான் திட்டம்
பிஎம் கிசான் திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், சிறு மற்றும் குறு விவசாயிகள், பிஎம் கிசான் இணையதளத்தில் (pmkisan.gov.in) உள்ள "New Farmer Registration" என்ற வசதி மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம்..
உங்களின் ஆதார் எண், செல்போன் நம்பர், நிலத்தின் பட்டா மாறுதல் தொடர்பான ஆவணங்களை சரியாக பதிவேற்றம் செய்வது அவசியம்.. விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அந்தந்த மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகளால் உங்கள் நில ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதி வாய்ந்த விவசாயியாக நீங்கள் அங்கீகரிக்கப்படுவீர்கள்.. இதன் பிறகு வரும் அடுத்தடுத்த தவணைகளில் உங்கள் வங்கி கணக்கிற்குத் தானாகவே நிதி வந்து சேரும்..
பணம் வராததற்கான காரணங்கள் என்னென்ன?
பிஎம் கிசான் பணம் வராததற்கு 3 முக்கியக் காரணங்கள் இருக்கலாம்.. முதலாவதாக, நில ஆவணங்கள் சரிபார்ப்பு முடிக்கப்படாமல் இருக்கலாம்.. அதாவது உங்கள் நில விவரங்கள் வெப்சைட்டில் சரியாக பதிவேற்றப்படவில்லையானால் உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரை அணுகி உடனடியாகப் பட்டா மற்றும் சிட்டா விவரங்களை இணைக்க வேண்டும்..
அடுத்ததாக இ-கேஒய்சி (e-KYC) முடிக்காமல் இருந்தாலும் பணம் கிடைக்காது.. எனவே, உங்கள் மொபைல் மூலம் பிஎம் கிசான் செயலியில் முகத்தை அடையாளம் காட்டும் வசதி வழியாகவோ அல்லது பொதுச்சேவை மையங்களுக்கு சென்றோ இதனை முடிப்பது கட்டாயமாகும்..
அடுத்ததாக, உங்கள் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.. இந்த மூன்று நிலைகளிலும் Yes என்று இருந்தால் மட்டுமே உங்கள் கணக்கிற்குப் பணம் வரும்..
புகார் அளிப்பது எப்படி?
ஒருவேளை உங்கள் தரப்பில் அனைத்து விவரங்களும் சரியாக இருந்தும் பணம் வரவில்லை என்றால், நீங்கள் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.. இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பிஎம் கிசான் வெப்சைட்டில் உள்ள Help Desk பகுதிக்கு சென்று, உங்களின் ஆதார் அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி புகாரைப் பதிவு செய்யலாம்..
அதில், Installment not received என்ற காரணத்தை தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.. பிறகு 155261 அல்லது 1800-11-5526 ஆகிய இவச நம்பர்களை தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.. இது தவிர 011-23381092 என்ற எண்ணும் செயல்பாட்டில் உள்ளது.. இணைய வசதி இல்லாத கிராமப்புற விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்று எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளிக்கலாம்..
தமிழக விவசாயிகள் செய்ய வேண்டியவை:
தமிழகத்திலும் தற்போது நில ஆவணங்களை மின்னணு முறையில் சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. எனவே, விவசாயிகள் தங்களின் வங்கி கணக்கில் ஆதார் இணைப்பு சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை வங்கிக்குச் சென்று உறுதி செய்து கொள்வது நல்லது..
மேலும், புதிய பயனாளிகள் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை Beneficiary Status மூலம் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.. மத்திய அரசின் இந்த நிதி உதவி விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய, இப்போதே மேற்கூறிய திருத்தங்களை மேற்கொள்வது அவசியமாகும்..!!!
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications