இனி 6000 கிடைக்காது..பிஎம் கிஷான் திட்டத்தில் பெரும் மோசடி! லிஸ்ட் போட்டு தூக்கும் மத்திய அரசு! ஷாக்
டெல்லி: நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவியாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டம் குறித்து தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது பிஎம் கிசான் திட்டத்தில் கணவனும், மனைவி என இருவரும் பணம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த திட்டத்தின்படி குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே இந்த சலுகையை பெற தகுதியானவர் என்ற நிலையில், இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய வேளாண் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
விவசாயிகள் நலனுக்காக 2019 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் ரூ.2,000 என விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இதுவரை 19 தவணைகளாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் 20வது தவணை நிதியை உத்தரப் பிரதேசம், வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

பிஎம் கிசான் திட்டம்
இந்த 20வது தவணை மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர். பல்வேறு மாநிலங்களின் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,000 வீதம் வரவு வைக்கப்பட்டுது. இந்நிலையில் தான் இந்த பிஎம் கிசான் திட்டத்தைச் சுற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஏனெனில், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே இத்திட்ட நிதி வழங்கப்படும் என்ற விதி இருந்தும், கணவன்-மனைவி இருவரும் பணம் பெற்றிருப்பது மத்திய அரசின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நிதி
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் மூலம் பலன் பெறும் பயனாளிகளின் விபரங்கள் மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் சரிபார்க்கப்பட்டது. இதுதொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், 31.01 லட்சம் பயனாளிகள் பற்றிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. அதில் 17.87 லட்சம் பேர் கணவன் -மனைவி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஒரே குடும்பத்தில் இருவரும் நிதி உதவி பெற்றது விதிமுறைகளை மீறிய செயல் என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண் அமைச்சகம்
இதையடுத்து, மத்திய வேளாண் அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் அனுப்பி, அக்டோபர் 15க்குள் பயனாளிகளின் விவரங்களை சரிபார்த்து தவறுகளை திருத்தும் பணியை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. திட்டத்தின் விதிமுறைகளின்படி, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே (கணவன் அல்லது மனைவி) இத்திட்ட நிதி கிடைக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் விவசாய நிலங்கள் இருவரின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டிருப்பதால், சில இடங்களில் தானாகவே இருவருக்கும் நிதி வந்துள்ளது என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இரட்டை பலன்
மத்திய அரசு இதை மிக முக்கிய பிரச்சினையாகக் கருத்தில் கொண்டு, இனி இரட்டைப் பலன்கள் வழங்கப்படாதவாறு மாநிலங்களுக்கு தனி வழிகாட்டுதல்கள் அனுப்பியுள்ளது. இதனால், வரவிருக்கும் தவணைகளில் பயனாளி பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படும் வாய்ப்பும் இருக்கிறது என மத்திய அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications