தமிழ்நாட்டில் 47 லட்சம் பேருக்கு.. வங்கி கணக்கில் தரப்படும் ரூ.2000.. நீங்க லிஸ்டில் இருக்கீங்களா?
சென்னை: பிஎம்-கிசான் சம்மான் நிதி திட்டத்தின் இந்த மாத தவணைத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்தத் தவணைக்கான நிதி இந்த மாதம் 24-ம் தேதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளனர்.
பிஎம்-கிசான் திட்டம்: தமிழக விவசாயிகள்
தமிழகத்தில் சுமார் 47 லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 3.24 லட்சம் விவசாயிகள் இந்தத் தவணைத் தொகையினைப் பெறவுள்ளனர்.
பிஎம்-கிசான் திட்டம் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று சம தவணைகளாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பயன் பரிமாற்றம் (டிபிடி) மூலம் செலுத்தப்படுகிறது. முன்னதாக, கிருஷி சகி ஒருங்கிணைப்புத் திட்டத்தின் (KSCP) கீழ் 30,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களில் (SHGs) உள்ள பெண்களுக்கு 'கிருஷி சகிஸ்' என்ற சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, சுமார் 9.25 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் மத்திய அரசு செலுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் ரூ.3.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
பிஎம்-கிசான்: பயன்கள்
கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்ட நிதியின் மூலம், பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்தப் பலன்கள் ரூ. 3.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2019-ல் தொடங்கப்பட்டதில் இருந்து 11 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயக் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9.26 கோடி பயனாளிகளுக்கு ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பணம் வழங்கப்பட உள்ளது.
பிஎம்-கிசான்: பயனாளிகள் தங்களது நிலையைச் சரிபார்க்கும் முறை
பிஎம்-கிசான் திட்டத்தில் பணம் பெற நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். மேலும், உங்களிடம் வங்கி கணக்கு இருக்க வேண்டும். உங்கள் வங்கி கணக்கை கேஎப்சி உடன் சரிபார்த்து இருக்க வேண்டும். அதோடு உங்கள் தொலைபேசி எண்ணை வங்கி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். இந்தத் திட்டம் மூலம் உங்களுக்கு பணம் வந்துள்ளதா என்பதைச் சரிபார்க்க, கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:
படி 1: அதிகாரப்பூர்வ PM Kisan இணையதள பக்கத்தில் லாக் இன் செய்யவும்.
படி 2: லாக் இன் செய்தவுடன் Beneficiary Status Page என்ற பக்கம் காட்டும். அந்த பக்கத்திற்கு செல்லவும்.
படி 3: அங்கே உள்ள "Beneficiary Status" என்பதைக் கிளிக் செய்தால் அடுத்த பேஜ் திறக்கும்.
படி 4: நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இருந்தால் உங்கள் லாக் இன் கணக்கை எடுத்து வைத்துக்கொள்ளவும். அதை பயன்படுத்தி உங்கள் ஆதார் எண் அல்லது அக்கவுண்ட் எண் மூலம் உள்ளே செல்ல முடியும்.
படி 5: அந்த பக்கத்தில் "Get Data" என்பதைக் தேர்வு செய்து உங்கள் விவரங்களை பார்க்கலாம். நீங்கள் திட்டத்தில் இருக்கிறீர்களா என்பதை சோதனை செய்ய முடியும்.
படி 6: இதிலேயே உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்த்து சோதனை செய்து கொள்ள முடியும்.
பிஎம்-கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த நிதி உதவி, அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications