இந்த மாதமே.. நாடு முழுக்க பலரின் வங்கி கணக்கிற்கு போகும் ரூ.2000.. சூப்பர்! யாருக்கெல்லாம் வரும்?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பிஎம்-கிசான் திட்டத்தின் அடுத்த கட்ட தவணையை செலுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. மே கடைசி வாரம் இந்த தொகை வழங்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 3 முறை.. அதாவது 4 மாதங்களுக்கு 1 முறை இந்த தொகை வழங்கப்படும் என்பதால் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது. யாருக்கெல்லாம் இந்த பணம் வழங்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PM-KISAN திட்டம், நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்குகிறது. நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) முறையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படுகிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9.26 கோடி பயனாளிகளுக்கு ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பணம் வழங்கப்பட உள்ளது.. ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்ட நிதி மூலம், PM-KISAN திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்தப் பலன்கள் ரூ. 3.04 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. 2019 இல் தொடங்கப்பட்டதில் இருந்து 11 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயி குடும்பங்களை பணம் சென்றடைந்துள்ளது.
ஏற்கனவே ஜூலை மாதம் நடந்த நிகழ்ச்சியின் போது, கிரிஷி சாகி ஒருங்கிணைப்பு திட்டத்தின் (KSCP) கீழ் 30,000 க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்களில் (SHGs) பெண்களுக்கு 'கிருஷி சாகிஸ்' என்ற சான்றிதழ்களையும் பிரதமர் மோடி வழங்கினார்.

பணம் வழங்கிய மத்திய அரசு: மொத்தமாக சுமார் 9.25 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.20,000 கோடி கொடுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தமாக ரூ.3.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் இந்த பணம் வழங்கப்படும் என்பதை எளிதாக சில கிளிக் மூலம் சோதனை செய்ய முடியும்.
எப்படி சோதனை செய்வது?
இந்த திட்டத்தில் பணம் பெற நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். இதற்கான திட்ட விண்ணப்பத்தை நிரப்பி, அதில் இணைய வேண்டும். அதேபோல் உங்களிடம் வங்கி கணக்கு இருக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கை கேஎப்சி உடன் சரிபார்த்து இருக்க வேண்டும்.
அதோடு இல்லாமல் உங்கள் போன் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். சரி இந்த திட்டம் மூலம் உங்களுக்கு இந்த பணம் கிடைத்திருக்கிறதா என்று பார்க்க பின்வரும் வகையில் சோதனை செய்ய வேண்டும்.
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ PM Kisan இணையதள பக்கத்தில் லாக் இன் செய்யவும்.
ஸ்டெப் 2: லாக் இன் செய்தவுடன் Beneficiary Status Page என்ற பக்கம் காட்டும். அந்த பக்கத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 3: அங்கே உள்ள "Beneficiary Status" என்பதைக் கிளிக் செய்தால் அடுத்த பேஜ் திறக்கும்.
ஸ்டெப் 4: நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இருந்தால் உங்கள் லாக் இன் கணக்கை எடுத்து வைத்துக்கொள்ளவும். அதை பயன்படுத்தி உங்கள் ஆதார் எண் அல்லது அக்கவுண்ட் எண் மூலம் உள்ளே செல்ல முடியும்.
ஸ்டெப் 5: அந்த பக்கத்தில் "Get Data" என்பதைக் தேர்வு செய்து உங்கள் விவரங்களை பார்க்கலாம். நீங்கள் திட்டத்தில் இருக்கிறீர்களா என்பதை சோதனை செய்ய முடியும்.
ஸ்டெப் 6: இதிலேயே உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்த்து சோதனை செய்து கொள்ள முடியும்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications