விவசாயிகள் குஷி.. பி.எம். கிசான் யோஜனாவின் அதிரடி.. 16வது தித்திப்பு மெசேஜ் வந்துருச்சு.. மகிழ்ச்சி
சென்னை: 15 தவணைகளாக நிதியுதவி பெற்று, 16 வது தவணைக்கு விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.. இந்நிலையில், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க துவங்கப்பட்ட திட்டமாகும்.

பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்று சொல்லப்படும் இந்த திட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தவணை ரூபாய்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவிகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது.
நம்முடைய நாட்டிலுள்ள 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 3 கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்... அவர்கள் மட்டும் மொத்தம் ரூ. 53,600 கோடி நிதியை பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அடுத்த தவணை: கடந்த நவம்பர் 15ம் தேதி பிரதமர் மோடியின் ஜார்கண்ட் பயணத்தின்போது, பிரதமர் கிசான் 15வது தவணைத்தொகையை வழங்கினார்.. இதன்மூலம், 8 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் தலா ரூ.2,000 வீதம் பணம் பெற்றுள்ளனர். தற்போது, 2024 வருடம் துவங்கியுள்ள நிலையில், 16வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
இந்த 16தவணை மூன்றிலிருந்து 4ஆக உயர்த்தப்படலாம் என்றும், வருடத்திற்கு இனி 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாய் உயர்த்தப்படலாம் என்றும் சலசலப்புகள் கிளம்பின என்றாலும், இதை பற்றி உறுதியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. எப்போது 16-வது தவணை வழங்கப்படும் என்ற ஆர்வம் பெருகிவந்த நிலையில், அதுகுறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
எப்போது: பிஎம் கிசான் 16வது தவணை பண வெளியீட்டு தேதி தற்போது இறுதி செய்யப்பட்டுள்தளாம்.. அதன்படி, நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 28ம் தேதி விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தவணை தொகையை பெற வேண்டுமானால், பி.எம்.கிசான் வெப்சைட்டில் தங்களது ஆதார் நம்பரை உறுதி செய்ய வேண்டும் .. அப்படி உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே தவணை வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியாக அறிவித்திருக்கிறது.
எனவே, பிஎம் கிசான் திட்டத்தில் பலனடைவோர், பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது செல்போன் மூலமாகவோ, ஆதார் நம்பரை கீழ்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம்.
விரல் ரேகை: உங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை யைத்திற்கு சென்று, தங்களுடைய பெயரை பி.எம்.கிசான் இணைய தளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு ஓடிபி வரும்.. அதை வைத்து, பிஎம் கிசான் வெப்சைட்டில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில், விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் வெப்சைட்டில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
அல்லது, உங்களது போனிலேயே ஆன்லைனில், http://pmkisan.gov.in என்ற வெப்சைட்டிற்கு சென்று, ஆதார் e-KYC என்ற பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். இது தொடர்பான கூடுதல் விவரம் ஏதாவது அறிய விரும்பினால் உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹெல்ப்லைன்: இவைகளையெல்லாம் முடித்த பிறகும், உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லையானால், உடனடியாக ஹெல்ப்லைன் எண்ணில் புகார் செய்யுங்கள். PM Kisan Yojana ஹெல்ப்லைன் எண் 155261 அல்லது 1800115526 (கட்டணமில்லை) அல்லது 011-23381092. இந்த எண்களை தொடர்பு கொண்டால், உங்களுக்கு உரிய பதில்கள் கிடைக்கும்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications