மோடிக்கு போன "எக்சிட் போல்" கணிப்புகள்.. திடீரென பதற்றத்தில் பாஜக.. அடித்து சொல்லும் புள்ளி!
சென்னை: பாஜகவிற்கு சிக்கலே அவர்களின் கோர் டீமை அவர்களால் வேலை பார்க்க வைக்க முடியவில்லை. தேர்தல் பணிகளை செய்ய கோர் டீம் வேலை செய்யவில்லை, இதனால் பாஜகவிற்கு ஆதரவான வாக்கு சதவிகிதம் வெகுவாக சரிந்துவிட்டது என்று சிபிஎம் கனகராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 4 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்படும்.

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தல் இது. முந்தைய தேர்தலை விஞ்சி, 44 நாட்கள் நீடிக்கும் நீண்ட தேர்தல் ஆகும். 1951-52 இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இவ்வளவு அதிக நாட்கள் ஒரு தேர்தல் நடக்கிறது.
பேட்டி: இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தல் தொடர்பாக சிபிஎம் கனகராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜகவிற்கு சிக்கலே அவர்களின் கோர் டீமை அவர்களால் வேலை பார்க்க வைக்க முடியவில்லை. தேர்தல் பணிகளை செய்ய கோர் டீம் வேலை செய்யவில்லை. எதிர் கட்சிகளில் ஊழல் குற்றச்சாட்டு வைத்து பலரை பாஜக தங்கள் பக்கம் கொண்டு வந்தது. இப்படி தங்கள் பக்கம் கொண்டு வந்தவர்களை பாஜக வேட்பாளர்களாக அறிவித்தது. கடைசியில் அந்த ஆட்களுக்கு பிரச்சாரம் செய்ய சொன்னார்கள்.
ஆனால் பாஜக கோர் டீம் அதை விரும்பவில்லை. இத்தனை வருடம் இவர்களை எதிர்த்து பேசினோம். இப்போது இவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சொன்னால் எப்படி செய்ய முடியும் என்று கூறுகின்றனர். தேர்தல் பணிகளை செய்ய கோர் டீம் வேலை செய்யவில்லை. இதன் காரணமாகவே இவர்களை தட்டி எழுப்ப முஸ்லீம் விவகாரத்தை மோடி கையில் எடுத்தார். தாலி பற்றி எல்லாம் பேசினார். இதனால்தான் தொடக்கத்தில் 7 வேட்பாளர்களை பாஜக திரும்ப பெற்றது.

பல வேட்பாளர்களை பாஜக திரும்ப பெற கோர் டீம் வேலை செய்ய முன்வராதது தான் காரணம். 2ம் கட்ட தேர்தல்களில் இருந்து இது பட்டவர்த்தனமாக வெளியாகிவிட்டது. பாஜகவிற்கு எக்சிட் போல் சென்று இருக்கும். பல நிறுவனங்கள் எக்சிட் போலை அனுப்பி இருக்கும். உளவுத்துறை ரிப்போர்ட் சென்று இருக்கும். அவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக இருந்தால் இப்படி பதற மாட்டார்கள். ஆனால் அவர்கள் பதற்றமாக இருக்கிறார்கள்.
வெற்றிபெற போகிறோம் என்று அவர்கள் கூலாக இல்லை. அவர்களிடம் பதற்றம் உள்ளது. உத்தர பிரதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசியை அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சனையாக மாற்றிவிட்டனர். இதை கவுண்டர் செய்ய மோடி திணறுகிறார். அதோடு பாஜகவிற்கு சிக்கலே அவர்களின் கோர் டீமை அவர்களால் வேலை பார்க்க வைக்க முடியவில்லை.
இதனால் அவர்கள் வாக்கு அளிக்கவும் வரவில்லை. இதனால்தான் வாக்கு சதவிகிதம் வெகுவாக சரிந்துவிட்டது என்று சிபிஎம் கனகராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications