ஒரே மேடையில் மீண்டும் பிரதமர் மோடி - மு.க ஸ்டாலின்.. 28ம் தேதி தூத்துக்குடி நிகழ்ச்சியில் பங்கேற்பு
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் முதல்வர் முக ஸ்டாலினும் பங்கேற்க உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழாவுக்கு பெயர் போன குலசேகரப்பட்டினத்தில்தான் இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைய இருக்கிறது.

பூகோள ரீதியாகவும் ராக்கெட் ஏவுவதற்கு உகந்த இடமாக குலசை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதி காற்றின் வேகம் அதிகம் இல்லாத இடமாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும் இருக்க வேண்டும். புயல், மின்னல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படாத பகுதியாகவும் இருக்க வேண்டும்.
அந்த வகையில், நிலையான கால நிலை கொண்ட குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. குலசேகரன்பட்டினம் நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே உள்ளதால், இந்த பகுதியில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும். இதனால் எரிபொருள் செலவும் மிச்சமாகும். தற்போது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள மாதவன் குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா, தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். கேலா இந்தியா துவக்க விழாவில் பிரதமர் மோடியும் முதல்வர் முக ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்ற நிலையில், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடி கடலோர பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications