உடல்சிதறி 9 பேர் பலி.. காஞ்சி பட்டாசு விபத்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் தனிதனியே நிவாரணம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பெண்கள் உள்பட 9 பேர் உடல் சிதறி இறந்தனர்.
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடந்த பட்டாசு ஆலை தீவிபத்தில் 9 பேர் உடல் சிதறி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் தீக்காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தனித்தனியாக இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இன்று மதியம் 12 மணியளவில் திடீரென்று தீவிபத்து ஏறப்ட்டது. இதனால் பட்டாசு ஆலையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.
இதில் அங்கிருந்த 5 கட்டடங்களில் 4 கட்டங்கள் அடுத்தடுத்து இடித்து விழுந்தன. இதனால் கட்டடங்களில் வேலை செய்து வந்தவர்கள் வெடிவிபத்து மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறி துடித்தனர்.

9 பேர் பலி
இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள், போலீசார் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்திருந்தனர். மேலும் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 15க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிகிச்சை பலனின்றி 5 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது.

பெயர் விபரம்
அதன்படி வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களின் பெயர்கள் பூபதி ( வயது 57), முருகன் (40), சசிகலா (35), தேவி (32), சுதர்சன் (31), வித்யா (30) என்பது தெரியவந்தது. 3 பேரின் உடல்களை அடையாளம் காணமுடியாத நிலையில் இருந்தது. அந்த உடல்களை அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்
இந்த சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்வரின் நிவாரண நிதியில் இரந்து வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி நிவாரணம்
இதன் தொடர்ச்சியாக இன்று இரவு பிரதமர் மோடி பட்டாசு ஆலை விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிவாரணமும் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலையில் நடந்த விபத்து பற்றி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டுகிறேன். இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிஎம்என்ஆர்எப் நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்'' என கூறியுள்ளார்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications