சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிப்.19 நிர்மலா சீதாராமன், பிப். 21 ராஜ்நாத்சிங், பிப்.25 மோடி தமிழகம் வருகை- கோவையில் பிரசாரம்

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் பிரதமர் மோடி வரும் 25-ந் தேதி மீண்டும் தமிழகம் வருகை தருகிறார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங் ஆகியோரும் தமிழகம் வருகை தருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் ஏற்கனவே தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூட்டணிகளில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

PM Modi and Union Minsiters to begin Poll Campaign in Tamilnadu

அதிமுக, திமுக, மநீம ஆகியவை தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்களை பெறும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. நாம் தமிழர் கட்சி ஏற்கனவே வேட்பாளர்களை களமிறக்கி பிரசாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் 25-ந் தேதி மீண்டும் தமிழகம் வருகை தருகிறார். கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தமிழக தேர்தல் பிரசாரத்தை கோவையில் பிரதமர் மோடி தொடங்க உள்ளார்.

ராகுல் காந்தி பிப். 27-ல் மீண்டும் தமிழகம் வருகை- தென் மாவட்டங்களில் 3 நாட்கள் பிரசாரம்!ராகுல் காந்தி பிப். 27-ல் மீண்டும் தமிழகம் வருகை- தென் மாவட்டங்களில் 3 நாட்கள் பிரசாரம்!

அதேபோல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 19-ந் தேதியும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரும் 21-ந் தேதியும் தமிழகம் வருகை தருகின்றனர்.

இன்னொரு பக்கம் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 27-ந் தேதி முதல் தமிழகத்தில் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.

English summary
PM Modi and Union Minsiters will begin Poll Campaign in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X