சேரில் தாளம் போட்டு.. விரல்களில் சுண்டி விட்டு.. தலையை ஆட்டி.. ஜாலியாக நடனத்தை ரசித்த மோடி!
நடன நிகழ்ச்சியை பிரதமரும், அதிபரும் ரசித்து பார்த்தனர்
Recommended Video
மாமல்லபுரம்: 63 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது என்றால் அது இன்னைக்குதான்!
இன்றைய நிகழ்வுகளை நினைத்து பார்த்தாலே நெஞ்சம் இனிப்பாக இருக்கிறது.. இரு நாட்டு தலைவர்களின் வருகை, வரவேற்பு, பேச்சுவார்த்தை, சிற்பங்கள் குறித்த விளக்கம், கைகளை உயர்த்தி கோர்த்து கொண்டு எடுத்த போட்டோ, கையில் இளநீரை ஸ்ட்டிரா போட்டு உறிஞ்சபடியே ஒரு கேஷுவல் பேச்சு என நடந்தேறியது.

இதை முடித்த கையோடு அப்படியே கலைநிகழ்ச்சிகளை காண சென்றுவிட்டனர் இரு தலைவர்களும்! மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் கலை நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இருவருமே ஆஜரானார்கள்.
கலைநிகழ்ச்சிகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங்கிற்கு சீன மொழியில் முன்னதாக, எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, முதலில் பரதநாட்டியத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. சேரின் கைப்பிடியில் தாளம் போட்டபடி, தலையாட்டியபடி ரசித்தார் மோடி!
இதில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. இந்த ராமாயண காட்சியின் நாட்டிய நிகழ்ச்சி குறித்து சீன அதிபருக்கு அடிக்கடி மோடி விளக்கி கொண்டே இருந்தார்.
அதேபோல கதகளி ஆட்டத்தை விரல்களை சுண்டி விட்டு ரசித்தார். தேர்ந்த கலா ரசிகர் போல அவரது ரசிப்பு இருந்தது. ஆனால், இப்படி தலையை, விரலை ஆட்டி ரசிக்க தெரியாவிட்டாலும், கலைஞர்களின் நடனத்தை சீன அதிபர் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டே இருந்தார்.
தமிழகத்தின் பரதநாட்டியம் முடிந்த கையோடு அப்படியே கேரளத்தின் கதகளி ஆட்டம் என அடுத்தடுத்து இந்தியாவின் பாரம்பரிய நடனங்கள் அணிவகுத்தன. இவை இந்தியாவின் கலாச்சார பரிமாணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. ஆக மொத்தம்.. பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்துடன் தகதகவென ஜொலிஜொலித்து வருகிறது நம் பல்லவ நாட்டு மாமல்லபுரம்!
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications