சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 "ஊர் பெரியவர்கள்" கூடி நடத்திய பேச்சு.. கலக்கல் கெட்டப்.. புதிய வரலாறு படைத்த மோடி, ஜின்பிங்!

மோடியும், சீன அதிபரும் உரையாற்றியதை நாடே வியந்து பார்த்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    Pm Modi Wearing veshti | தமிழ் பாரம்பரிய உடையுடன் வந்த பிரதமர் மோடி-வீடியோ

    மாமல்லபுரம்: இவர் என்னமோ உள்ளூர்வாசி மாதிரியும், அவர் என்னவோ கார்ப்பரேட் ஆபீசில் வேலை செய்ற மாதிரியும் இரு நாட்டு தலைவர்களும் பேசி கொண்டதை உலகமே பார்த்து வியந்தது.
    காரில் வந்து சீன அதிபர் இறங்கியதுமே நம் பிரதமர் விரைந்து சென்று கையை கொடுத்து வரவேற்றார். இருவரையும் பார்ப்பதற்கு இரு நாட்டு தலைவர்கள் போலவே காணப்படவில்லை.

    வேட்டி, சட்டையில் நம்ம ஆளு பளபளக்க.. பேன்ட் சட்டையில் அதிபர் கிறங்கடிக்க.. இருவருமே மாமல்லபுரத்தை கலக்கினார்கள். கையை கோர்த்தார்கள்.. போட்டோ எடுத்தார்கள்.. சிற்பங்களை பார்வையிட்டபடியே ஒரு கேஷூவல் வாக்.. சீரியஸ் டாக் என்று ஒரு மினி பேச்சுவார்த்தை அங்கே நடந்து முடிந்தது.

    pm modi and xi jinpings casual talk

    அந்த இடத்தில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அதிபருக்கு ஒரு உதவியாளர், பிரதமருக்கு ஒரு உதவியாளர்.. என இரண்டு பக்கமும் உட்கார்ந்து கொண்டனர். மொத்தமே 4 பேர்தான்.. இதில் இரு தலைவர்களும் சிறிது நேரம் பேசியதுதான் ஹைலைட்டாக இருந்தது.

    ஆளுக்கு ஒரு இளநீரை கையில் பிடித்து கொண்டுள்ளனர். அதில் ஸ்ட்டிரா போட்டு குடித்தபடியே பேசி முடித்தார்கள். இவர்கள் பேசியதை பார்த்தால், நம்ம கிராமப்புறங்களில் ஊர்ப் பெரியவர்கள் கூடி பிரச்சினைகளை பேசித் தீர்ப்பார்கள் இல்லையா... அது மாதிரி இருந்தது.

    மயக்கும் மாமல்லபுரம்.. இதமான வெயிலுக்கு.. இளநீர் குடிங்க.. உபசரித்த மோடி. நெகிழ்ந்த ஜின்பிங்!மயக்கும் மாமல்லபுரம்.. இதமான வெயிலுக்கு.. இளநீர் குடிங்க.. உபசரித்த மோடி. நெகிழ்ந்த ஜின்பிங்!

    இதில் இருந்து ஒன்று தெளிவாகிறது.. எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்கலாம். பேசினால் தீராத பிரச்சினை இல்லை. அதை இப்படி ரிலாக்ஸ்டாக, இயல்பான முறையில் பேசும்போது இன்னும் மனதார பேசி சுமூகமாக தீர்வு காண முடியும் என்பதைதான் இவர்கள் நமக்கு உணர்த்தி உள்ளனர்.. உலகுக்கு மறுபடியும் புரிய வைத்தும் உள்ளனர்.

    டிப்பிக்கல் தமிழ்க் கலாச்சாரமும் கூட இது என்பது நமக்கு எக்ஸ்க்டரா சந்தோஷம்!

    English summary
    PM Modi disscussed vy casualy with Chinese president Xi Jinping in mahabalipuram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X