எப்போதும் தமிழகத்தின் முன்னேற்றம் பற்றியே பேசுவார்.. வசந்த குமார் மறைவு.. பிரதமர் மோடி உருக்கம்!
சென்னை: எம்பி வசந்த குமார் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக அரசியல் மற்றும் வியாபார உலகில் தனக்கு என்று தனி சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் இன்று காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வசந்தகுமாருக்கு வயது 70.

சென்னையில் சிகிச்சை பலனின்றி கொரோனாவிற்கு மரணம் அடைந்தார். ஆகஸ்ட் 10 முதல் கொரோனா காரணமாக வசந்த குமார் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் எம்பி வசந்த குமார் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.எம்பி வசந்த குமார் மறைவு வருத்தம் அளிக்கிறது. வியாபார உலகில் மற்றும் சமூக சேவையில் இவர் ஆற்றிய பங்கு கவனிக்கத்தக்கது.

என்னிடம் பேசும் போதெல்லாம் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து எப்போதும் பேசுபவர் வசந்த குமார். அவரின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கல்கள். ஓம் சாந்தி என்று பிரதமர் மோடி தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications