சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தால் என்ன நன்மை தெரியுமா? பிரதமர் மோடி விளக்கம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைந்துள்ள அதிநவீன ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் சென்னையின் உள்கட்டமைப்பு வசதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில், சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைந்துள்ள அதிநவீன ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை ஏப்ரல் 8-ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார் என தெரிவித்திருந்தது.
விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் ட்விட்டுக்கு பதிலளித்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:


"இது சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும். இது இணைப்பு சேவை வசதிகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்." இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழ்நாடு வருகை தரும் மோடி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை (முதல்பகுதி) பிரதமர் தொடங்கிவைக்கிறார். இந்தப் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், விமான நிலையத்தின் பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும். இந்தப் புதிய முனையம், கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும். இயற்கையான சுற்றுப்புறத்தைக் கொண்டதாக இது அமையும். சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் சென்னை-கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைப்பார். தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கிவைப்பார். திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையிலான ரயில் சேவையையும் அவர் தொடங்கிவைப்பார். இந்த ரயில்சேவை கோவை, திருவாரூர், நாகப்பட்டிணம் பயணிகளுக்கு பயனளிக்கும்.

திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையே 37 கி.மீ. அகல ரயில்பாதைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இது ரூ.294 கோடியில் நிறைவடைந்துள்ளது. நாகை மாவட்டம் அகஸ்தியம் பள்ளியில் இருந்து உப்பு ஏற்றிச்செல்ல இது உதவும். சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-ம் ஆண்டு கொண்டாட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்கிறார். 1897-ம் ஆண்டு சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தை சுவாமி ராமகிருஷ்ணானந்தா தொடங்கினார். ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் ஆகியவை மனிதகுலத்துக்கு சமூகசேவை நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வடிவத்தில் சேவைகளை வழங்கும் ஆன்மிக அமைப்பாக உள்ளது. சென்னை அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மதுரை நகரில் 7.3 கி.மீ. நீள மேல்மட்டச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-ன் 24.4 கி.மீ. நீள 4 வழிச்சாலை ஆகியவற்றை அவர் தொடங்கிவைப்பார். தேசிய நெடுஞ்சாலை 747-ல் சாலைத் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார். ரூ.2,400 கோடிக்கும் அதிக மதிப்பிலான இந்தத் திட்டம் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே சாலை இணைப்பை மேம்படுத்தும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், கேரளாவில் உள்ள சபரிமலை ஆகியவற்றுக்கு பக்தர்கள் வசதியாக பயணம் செய்வதை இது உறுதிசெய்யும்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications