ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பாஜகவின் பூத் கமிட்டியில் பணியாற்றுவோரை உற்சாகப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது தமிழகத்தில் சிறிய குழுக்களாக பிரிந்து மக்களை சந்தித்து பேச வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்களை சந்தித்து பேச வேண்டும் பிளான் வகுத்து கொடுத்தார். இந்த கலந்துரையாடலின் பிரதமர் மோடி பேசியது பற்றிய விவரம் வருமாறு:
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் களம் அனல் பறக்கிறது.

அனைத்து கட்சி வேட்பாளர்களும், தலைவர்களும் பம்பரமாய் சுழன்று தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் தான் தற்போது தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள், உள்ளூர் பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தேசிய அளவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட யாரும் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது.
பிரதமர் மோடி கலந்துரையாடல்
இதனால் பாஜகவினர் சோர்வடைந்துள்ளனர். இந்நிலையில் தான் இன்று மாலை 4 மணிக்கு 'எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி' என்ற பெயரில் பிரதமர் மோடி தமிழக பாஜகவின் வாக்குச்சாவடி நிர்வாகிகளுடன் கலந்துரையாடலை தொடங்கினார். அப்போது ஒவ்வொருவரின் கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளித்தார் இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
திமுக மீது அட்டாக்
''விவசாயிகளின் நலன்களுக்கு தான் நாம் முன்னுரிமை அளிக்கிறோம். ஆனால்
திமுக 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தமிழகத்திற்குப் புதிய வளர்ச்சியைப் பெற்றுத்தரவில்லை.
பலமுறை மத்திய அரசில் அங்கம் வகித்தபோதிலும், தமிழகத்திற்குப் புதிய திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை.
பல பிரச்சனைகள் இருந்தாலும் தீர்வு காணவில்லை. ஆனால் இன்று என்டிஏ கூட்டணியில் புதிய ரயில்வே, நெடுஞ்சாலை மற்றும் விமான நிலையத் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.
நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நனவாக்கும் திசையில் ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டு காலத்தில், மருத்துவ இடங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
மத்தியில் நம்முடைய ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக பாம்பன் பாலத்தின் கட்டுமானத்தை கூறலாம்.
தனித்தனி குழுவாக பேச வேண்டும்
தமிழகம் முழுவதும் சிறிய குழுக்களாக பிரிந்து மக்களை சந்தித்து பேச வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்களை சந்தித்து நம் திட்டங்களை எடுத்து கூற வேண்டும். தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு பணிகளை செய்துள்ளோம் என்பதை இளம் வாக்காளர்களுக்கு புரிய வைப்பதோடு, 'இரட்டை என்ஜின் அரசு' (Double-engine government) அமைந்தால், வளர்ச்சியின் வேகம் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் என எடுத்து கூற வேண்டும்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு திட்டங்களின் பயன்களும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு இடைத்தரகர்கள் தலையீடு இன்றி நேரடியாக வரும். விவசாயிகளின் திட்டங்கள் விவசாயிகளை நேரடியாக சென்றடையும். .
தமிழகத்தில், 'பிஎம் கிசான்' திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
'ஃபசல் பீமா யோஜனா' (பயிர் காப்பீட்டுத் திட்டம்) மூலமாகவும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதை எடுத்து கூற வேண்டும்.
திமுகவின் அங்கமாக மாறிய ஊழல்
அதேபோல் திமுக அரசின் அணுகுமுறையின் காரணமாக, பல ஏழை எளிய குடும்பங்களால் 'பிஎம் ஆவாஸ் யோஜனா' (பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்) மூலம் பயனடைய முடியாமல் போனது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும்.
முறையான கணக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை; தகுதியுள்ள பயனாளிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அவ்வாறு முறையாக செய்யப்பட்டிருந்தால், தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைத்திருக்கும்.
இன்று, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
போதைப் பொருட்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனைக்கான நெட்வொர்க் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இந்த சட்டவிரோதச் செயல்களுக்கு திமுக அரசே துணை போவது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
தமிழகத்தில், திமுக அரசு ஊழலை தனது நிர்வாக அமைப்பின் ஒரு அங்கமாகவே மாற்றிவிட்டது.
ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் அதிகரித்து உள்ளன.
பல அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஊழல், கமிஷன் மற்றும் வசூல் ஆகியவை திமுக அரசின் அடையாளமாக மாறி வருகின்றன. இதனை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும்'' என கூறியுள்ளார்.
-
46 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை.. தமிழக அரசியல் கட்சிகள் தயங்குவது ஏன்? பின்னணி -
4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
ரத்தாகிறதா தமிழக சட்டசபை தேர்தல்? உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்தவர் மனுத்தாக்கல்.. பின்னணி -
விஜயின் தவெகவிற்கு ‘செக்'.. சென்னையின் 16 தொகுதிகளில் வெல்ல சபரீசன் வியூகம்.. ரெடியான 5 லட்சம் பேர் -
விஜய்க்கு அடிமேல் அடி.. ஸ்டாலின் - எடப்பாடி - சீமானிடம் பின்தங்கிய தவெக.. இந்த 2 மேட்டரை கவனிச்சீங்களா -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
திமுக வேட்பாளருக்கே ‘ஸ்கெட்ச்சா? தொண்டாமுத்தூரில் யாரும் எதிர்பார்க்கலையே.. பின்னணியில் எஸ்பி வேலுமணி? -
என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது! சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்! அடுத்து ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications