நாமெல்லாம் நிம்மதியா வாழ நரேந்திர மோடிஜிதான் காரணம்.. நெகிழ்ந்து உருகி சிலாகித்த எடப்பாடி!
பிரதமர் மோடி இருப்பதால்தான் நாட்டில் மக்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
Recommended Video

சென்னை: பிரதமர் மோடி இருப்பதால்தான் நாட்டில் மக்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சென்னையில் பாஜக சார்பாக பெரிய பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இருக்கிறார். அதேபோல் இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லோரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இதில் பிரதமர் மோடியை பாராட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சுமார் 20 நிமிடம் இவர் பேசினார்.

மோடி தகுதி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சில், இந்தியாவை ஆளும் ஒரே தகுதி கொண்டவர் பிரதமர் மோடிதான். 130 கோடி பேரில் மோடி மட்டுமே பிரதமர் ஆக தகுதி கொண்டவர். எங்கு தேடினாலும் தகுதியான ஒரு பிரதமர் வேட்பாளர் கிடைக்கவில்லை. மோடியால்தான் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்

மக்கள் சந்தோசம்
மக்கள் சந்தோசமாக வாழ மோடிதான் காரணம். அண்டை நாடு நம்மை தாக்குகிறது. அண்டை நாடு தினமும் நம்மை தொடர்ந்து அச்சுறுத்துகிறது. புல்வாமாவில் தீவிரவாதிகள் மோசமாக தாக்கினார்கள்.

புல்வாமா தாக்குதல்
மக்கள் எல்லோரும் புல்வாமா தாக்குதலால் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் மோடி உடனடியாக செயல்பட்டு தீவிரவாத முகாம்களை அழித்தார். விமானி அபிநந்தனை வேகமாக மீட்டவர் நம் மோடி. இதன் மூலம் பிரதமர் மோடி வரலாறு படைத்துள்ளார்.

தமிழகம் முன்னேற்றம்
தமிழகம் வேகமாக முன்னேறி இருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களை நமது அரசு வேகமாக செய்துள்ளது. பாஜக ஆட்சியில் விலைவாசி குறைந்துள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை பாஜக தமிழகத்தில் தொடங்கி உள்ளது. விவசாயிகளுக்காக மோடி அரசு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

கோதாவரி நதிகள்
கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். பிரதமர் சிறுகுறு விவசாயிகளுக்கு நலம் பெற நிறைய திட்டம் கொண்டு வந்துள்ளனர். கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டனர், இப்போது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத மாதம் பணம் அளிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அக்கா போன்றவர்.

மக்கள்
ஏழை மக்களுக்கு ரூ.2000 கொடுப்பது தவறா?.ஒரு ஏழை விவசாயிக்கு பணம் கொடுப்பது தவறா?. ஸ்டாலின் எங்கள் கூட்டணியை விமர்சிக்கிறார். எங்கள் கூட்டணியை மக்கள் விரோத கூட்டணி என்கிறார். எங்கள் கூட்டணியில் பலர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

நான் விவசாயி
நான் விவசாயி: மோடி விவசாயி: ராமதாஸ் விவசாயி. நம்முடைய கூட்டணி மெகா கூட்டணி, இயற்கையான கூட்டணி, அதனால்தான் ஸ்டாலின் எங்களை பார்த்து பயப்படுகிறார். இப்போது எங்கள் கூட்டணிக்கு 40 எம்.பி பலம் இருக்கிறது. அதிமுக 39, பாமக 1, பாஜக 1 என்று பெரிய பலம் கொண்டவர்கள் நாம், என்று முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications