Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை, சேலத்துக்கு ஜாக்பாட்.. எர்ணாகுளம் - பெங்களூருக்கு புதிய வந்தே பாரத் ரயில்.. டைமிங், ரூட் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி இன்று 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். இதில் குறிப்பாக கோவை, சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும், எத்தனை மணிக்கு புறப்படும் என்ற விவரங்களை பார்க்கலாம்.

வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுக்க வந்தே பாரத் ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் 4 புதிய வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

pm-modi-launches-four-new-vande-bharat-trains-including-ernakulam-bangalore-route

மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இருந்து இந்த 4 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பனாரஸ் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பனாரஸ்-கஜுராஹோ, லக்னோ-சஹரன்பூர், ஃபெரோஸ்பூர்-டெல்லி மற்றும் எர்ணாகுளம்-பெங்களூர் ஆகிய 4 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை இன்று காலையில் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் இணைப்பை மேம்படுத்துவதோடு மக்களுக்கு அதிக வசதியை வழங்கும். வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அமிர்த பாரத் போன்ற ரயில்கள், இந்திய ரயில்வேயின் புதிய தலைமுறைக்கான அடித்தளத்தை அமைத்து வருகின்றன" என்று தெரிவித்தார்.

1. பனாரஸ் - கஜுராஹோ:

பனாரஸ் - கஜுராஹோ இடையே புதிதாக இயக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயிலால் வழக்கமான பயண நேரத்தை விட சுமார் 2 மணி நேரம் 40 நிமிடம் விரைவாக செல்ல முடியும். இந்த ரயிலானது வாரணாசி, பிரயாக்ராஜ், சித்திரகூட் மற்றும் கஜுராஹோ ஆகிய முக்கிய நகரங்களில் நின்று செல்லும்.

2. லக்னோ - சஹரன்பூர்:

லக்னோ - சஹரன்பூர் இடையே இயக்கப்பட்டுள்ள புதிய வந்தே பாரத் ரயிலானது 7 மணி நேரம் 45 நிமிடங்களில் சென்று சேரும். இந்த ரயிலானது லக்னோ, சீதாபூர், ஷாஜஹான்பூர், பரேலி, மொராதாபாத், பிஜ்னோர் மற்றும் சஹரன்பூர் ஆகிய முக்கிய நகரங்களில் நின்று செல்லும்.

3. ஃபெரோஸ்பூர் - டெல்லி:

ஃபெரோஸ்பூர் - டெல்லி இடையே இயக்கப்பட்டுள்ள புதிய வந்தே பாரத் ரயிலானது 6 மணி நேரம் 40 நிமிடங்களில் பயணத்தை முடிக்கும். டெல்லிக்கும் பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கும் இடையே பதிண்டா, பாட்டியாலா போன்ற முக்கிய நகரங்கள் வழியாக இந்த ரயிலானது இயக்கப்படுகிறது.

4. எர்ணாகுளம் - பெங்களூர்:

எர்ணாகுளம் - பெங்களூர் வந்தே பாரத் ரயிலானது தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் வழியாக இயக்கப்படுகிறது. இவ்விரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரமானது 2 மணி நேரம் குறைந்து, மொத்த பயண நேரத்தையும் வெறும் 8 மணி நேரம் 40 நிமிடங்களில் நிறைவு செய்யும்.

நின்று செல்லும் ரயில் நிலையங்கள்:

இந்த ரயில் கேரளாவின் திருச்சூர், பாலக்காடு, தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூர் புறநகர் பகுதியான கிருஷ்ணராஜபுரம் (கேஎஸ்ஆர்) என மொத்தம் 7 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

எத்தனை மணிக்கு புறப்படும்?

* கே.எஸ்.ஆர். பெங்களூர் - எர்ணாகுளம் (வண்டி எண் 26651) வந்தே பாரத் ரயிலானது பெங்களூரில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

* மறுமார்க்கத்தில், எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர். பெங்களூர் வந்தே பாரத் ரயில் (26652) எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு பெங்களூரை வந்தடையும்.

முன்பதிவு எப்போது?

பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தாலும், வரும் 11 ஆம் தேதி முதல் தான் இந்த ரயில் சேவையானது தொடங்கும். தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+