அண்ணாமலைக்கு புக் செய்யப்பட்ட ரூம்.. கடைசியில் கேன்சல்.. யாரும் குமரி வர வேண்டாம்.. மோடி உத்தரவு?
சென்னை: பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் நிலையில், தமிழ்நாடு பாஜகவினருக்கு டெல்லி பாஜக தலைமை சார்பாக முக்கியமான ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இன்று லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய உள்ளார். இன்று தமிழ்நாடு வரும் மோடி, குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளது. கடந்த முறை 2019 லோக்சபா தேர்தலுக்கு பின் கேதார் நாத் குகையில் மோடி தியானம் செய்தார்.

அதேபோல் இந்த முறை தியானம் செய்கிறார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்.. சேனல்களின் எல்லா கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து பிரச்சாரம் முடிந்த பின்பும் கூட தேர்தலுக்கு முன்பாக மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய உள்ளார். சுவாமி விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் மோடி தியானம் செய்வார் . இரண்டு நாட்களுக்கு அவர் தியானம் செய்ய உள்ளார்.
முதலில் டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மோடி, பின்னர் கன்னியாகுமரி சென்று மாலையில் நினைவிடத்தை சென்றடைவார். அதன்பின் மாலைக்கு பின் தியானத்தை தொடங்குவார்.
உத்தரவு; பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் நிலையில், தமிழ்நாடு பாஜகவினருக்கு டெல்லி பாஜக தலைமை சார்பாக முக்கியமான ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று உத்தரவு சென்றுள்ளது.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்காக, விடுதியில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த அறைகள் புக்கிங் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மோடி இந்த விவேகானந்தா தியான மண்டபத்தை தேர்வு செய்தது அரசியல் ஆய்வாளர்களால் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானியும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி விவேகானந்தர் மூன்று நாட்கள் இரவும் பகலும் இங்கு தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதே இடத்தில் இறுதிக்கட்ட தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களை கவரும் விதமாக மோடி தியானம் செய்ய உள்ளார்.
பாதுகாப்பு தீவிரம்; பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் 45 மணி நேர தியானத்தில் ஈடுபட உள்ளதால், இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, முக்கிய நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய சில சந்திப்புகளை முடித்துக்கொண்டு மோடி கேரளா வழியாக குமரி செல்ல உள்ளார்.
பிரதமர் மோடி தியானம் செய்வதால், 2,000 போலீசார் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மே 30 மாலை தொடங்கி ஜூன் 1 மாலை வரை அவர் தியானத்தில் இருப்பார். சுவாமி விவேகானந்தர் அங்கு தனது தெய்வீக தரிசனத்தைப் பெற்றதாக நம்பப்படுவதால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் அங்கு பிரதமர் மோடி செல்லும் நிலையில் நேற்று மாலை ஹெலிகாப்டர் தரையிறங்கும் சோதனை நடத்தப்பட்டது. இங்கே தற்போது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications