பிரதமர் மோடி இந்தியாவின் நவீன இரும்பு மனிதர்.. தமிழிசை புகழாரம்.. அமித்ஷாவுக்கும் பாராட்டு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் நவீன இரும்பு மனிதர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பாராட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் 370 வது பிரவினை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல் காஷ்மீர் மாறியுள்ளது. இந்த அறிவிப்பை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருவதோடு பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக புகழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், இரும்பு மனிதர் போல் பிரதமர் மோடி செயல்படுவதாகவும், அவருடன் இணை இரும்பு மனிதர் போல் அமித்ஷா செயல்பட்டு வருவாகவும் தெரிவித்துள்ளார். காஷ்மீர் குறித்த அரசின் இந்த அறிவிப்பு ஓட்டுக்கானது அல்ல என்றும் நாட்டுக்கான அவசியம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
மேலும் காஷ்மீர் விவகாரத்தில் பாஜக சாதனையை புரிந்துள்ளது என்றும் கலவர பூமியாக இருந்த காஷ்மீர், சுற்றுலாத் தலமாக, பழைய பெருமையை பெற்றுள்ளது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று ஜம்மு காஷ்மீர் மசோதாவுக்கு திமுக நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications