மோடி மீண்டும் பிரதமராக வரவே கூடாது.. தோற்கடிச்சே ஆகனும்.. சொல்வது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி!
மதுரை: மோடி மீண்டும் 3ஆவது முறையாகப் பிரதமராக வர கூடாது என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அவரை தோற்கடிக்க வேண்டும் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், அனைத்து வேட்பாளர்களுக்கும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என அவர்கள் வாக்கு கேட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று பாஜகவில் எந்தவொரு தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை என்று சொல்லி பகீர் கிளப்பியுள்ளார்.
தோற்கடிக்க வேண்டும்: இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி சில பரபர கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவாரா என்ற கேள்விக்குத் துளியும் யோசிக்காமல், "அவர் வரக்கூடாது. அவரை தோற்கடிக்க வேண்டும்" என்று கூறினார். இதைக் கேட்டு அருகே இருந்தவர்களே கூட ஒரு நொடி ஸ்டன் ஆனார்கள்.
தொடர்ந்து தமிழகத்தில் இந்த முறை திமுக vs அதிமுக vs பாஜக என்று மும்முனை போட்டியா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "வேட்பாளர்களை யார் வேண்டுமானாலும் நிற்க வைக்கலாம். பணத்தைக் கொடுத்து விளம்பரம் கூடச் செய்யலாம். ஆனால் மக்கள் நம்பி ஏற்றுக் கொள்கிறார்களா.. இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது. நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.
பாஜக வெல்லலாம்: தேசியளவில் பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை எளிதாகக் கிடைக்கலாம். ஆனால் மோடி வரக்கூடாது. ஏனென்றால் ஏற்கனவே மோடி இரண்டு முறை பிரதமராக இருந்துவிட்டார். எதைச் செய்ய வேண்டுமோ அதை அவர் செய்யவில்லை. சீனா நமது நாட்டில் புகுந்து 4000 சதுர கிமீ நிலத்தை எடுத்துள்ளனர். அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அவர் எதையும் செய்யவில்லை.
விளம்பரத்தில் தான் அதைச் செய்துவிட்டோம் இதைச் செய்துவிட்டோம் என்கிறார்கள். ஆனால், உண்மையில் எதுவுமே இல்லை. மாலத்தீவு போன்ற சிறு நாடுகள் கூட நமது வீரர்களை வெளியே அனுப்பிவிட்டனர். அதைத் தடுக்க என்ன செய்தோம். எதுவும் செய்யவில்லை என்பதை உண்மை..
மோடிக்குப் பதில் யார்: மோடிக்குப் பதில் யார் வருவார்கள் எனக் கேட்கிறார்கள்.. ஒரு காலத்தில் நேருக்குப் பிறகு யார் தான் வருவார்கள் என்றார்கள். அதுபோலத் தான் இந்த கேள்வி இருக்கிறது. மோடிக்குப் பிறகு நிச்சயம் யாராவது வருவார்கள். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்" என்றார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications