அற்புதம் செய்கிறார் தமிழர்.. ராகவனை புகழ்ந்த மோடி! முருகன், தேவி, சோழர் சிலைகள் பற்றியும் பேசுகிறாரே
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டை சேர்ந்த ஓவியர் ஒருவரையும், தமிழ்நாட்டின் கலைகளையும் இன்றைய மன் கி பாத் உரையில் போற்றி பேசி இருக்கிறார். யார் அவர்? விரிவாக காண்போம்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "என் அன்பான நாட்டு மக்களே, பல நேரங்களில், சூழலியல், தாவரங்கள், விலங்கினங்கள், உயிர் பன்முகத்தன்மை போன்ற சொற்களைக் கேட்கும்போது, சிலர் இவை சிறப்புப் பாடங்கள் என்று நினைக்கிறார்கள்; நிபுணர்கள் தொடர்பான பாடங்கள். ஆனால் அது அப்படியல்ல. இயற்கையை உண்மையாக நேசித்தால், நமது சிறு முயற்சியால் கூட பலவற்றைச் செய்யலாம்.

சுரேஷ் ராகவன் ஜி தமிழ்நாட்டின் வடவள்ளியைச் சேர்ந்த நண்பர். ராகவன் ஜிக்கு ஓவியம் வரைவதில் விருப்பம். உங்களுக்கு தெரியும், ஓவியம் கலை மற்றும் கேன்வாஸ் தொடர்பான வேலை, ஆனால் ராகவன் ஜி தனது ஓவியங்கள் மூலம் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய தகவல்களை பாதுகாக்க முடிவு செய்தார்.
பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் ஓவியங்களை உருவாக்குவதன் மூலம் அவை தொடர்பான தகவல்களை ஆவணப்படுத்துகிறார். இப்போது வரை அவர் அழிவின் விளிம்பில் இருக்கும் டஜன் கணக்கான பறவைகள், விலங்குகள், ஆர்க்கிட்களின் ஓவியங்களை வரைந்துள்ளார். கலை மூலம் இயற்கைக்கு சேவை செய்யும் இந்த உதாரணம் உண்மையிலேயே அற்புதமானது.
இன்று நான் உங்களுக்கு இன்னும் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரு அற்புதமான கிரேஸ் தோன்றியது. அமெரிக்கா நூற்றுக்கும் மேற்பட்ட அரிய மற்றும் பழங்கால கலைப்பொருட்களை எங்களிடம் திருப்பி அளித்துள்ளது. இந்தச் செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இந்தக் கலைப் பொருட்கள் குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது.
இளைஞர்கள் தங்கள் பாரம்பரியத்தின் மீது பெருமிதத்தை வெளிப்படுத்தினர். இந்தியா திரும்பிய இந்த கலைப்பொருட்கள் 2500 முதல் 250 ஆண்டுகள் பழமையானவை. இந்த அரிய பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் தொடர்புடையவை என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். இவை டெரகோட்டா, கல், உலோகம் மற்றும் மரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில உங்களை ஆச்சரியத்தில் நிரப்பும் வகையில் உள்ளன.
அவற்றைப் பார்த்தால் மெய்சிலிர்க்க நேரிடும். இவற்றில் 11 ஆம் நூற்றாண்டின் அழகிய மணற்கல் சிற்பத்தையும் நீங்கள் காணலாம். இது ஒரு 'அப்சரா' நடனத்தின் கலைப்படைப்பு, இது மத்திய பிரதேசத்தை சேர்ந்தது. சோழர் காலத்து பல சிலைகளும் இவற்றின் ஒரு பகுதியாகும்.
தேவி மற்றும் முருகன் சிலைகள் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை மற்றும் தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரத்துடன் தொடர்புடையவை. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் பழமையான விநாயகப் பெருமானின் வெண்கலச் சிலையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications