விடவே விடாதீங்க.. அடிச்சு சொன்ன மோடி.. ஜி 20 மாநாடு முடிந்ததும் உதயநிதிக்கு செக்? டெல்லி பிளானா?
சென்னை: ஜி 20 மாநாட்டிற்கு பிறகு பாஜகவினர் உதயநிதி ஸ்டாலினை குறி வைக்க வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் நேற்று முதல்நாள் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது என்று கடுமையாக கூறினார்.

அதோடு, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று பேசினார்.
சனாதனம் பற்றிய பேச்சு: சனாதனம் குறித்த அவரின் பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பேச்சுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜகவினர் பலரும் அவரின் பேச்சால் அரண்டு போய் உள்ளனர். அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் வர தொடங்கி உள்ளன,
மோடி - விடாதீங்க உத்தரவு: இந்த நிலையில்தான் அமைச்சர் உதயநிதிக்கு உரிய பதிலடி தர வேண்டும்' என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உதயநிதியின் சனாதன கருத்து குறித்து பதிலடி கொடுக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார். எந்த மதத்தையும் தவறாக பேசக்கூடாது; சனாதன தர்மத்தை யாரேனும் தவறாக பேசினால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி உரையாடியபோது சனாதனம் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய அரசியலில் திமுக கவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது திடீரென பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் திமுகவை குறி வைக்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில்தான் ஜி 20 மாநாட்டிற்கு பிறகு பாஜக வினர் உதயநிதி ஸ்டாலினை குறி வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜி 20 மாநாடு: ஜி20 டெல்லி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றையத்தை உள்ளடக்கியது (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.
இந்த ஜி 20 உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இந்த மாநாடு நடக்கும் சமயத்தில் நாட்டில் போராட்டங்கள், போராட்டங்கள் காரணமாக மோதல்கள் நடந்தால் சரியாக இருக்காது. அதனால் கூட்டம் முடிந்த பின் திங்கள் கிழமையில் இருந்து போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த போராட்டங்களில் மோதல்களை உருவாக்கி அதன் மூலம் கலவரத்திற்கு உதயநிதி பேச்சுதான் காரணம் என்று கூறி அவர் மீது வழக்கு தொடுக்க வைக்க முயலலாம் என்ற திட்டத்தில் டெல்லி பாஜக வட்டாரங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications